காஷ்மீர் வன்முறை: போலீசாரின் 70 துப்பாக்கியை போராட்டக்காரர்கள் பறித்தனர்

Last Updated : Jul 13, 2016, 10:11 AM IST
காஷ்மீர் வன்முறை: போலீசாரின் 70 துப்பாக்கியை போராட்டக்காரர்கள் பறித்தனர் title=

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்தபோது போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களை  பறித்தனர் என்று தெரியவந்து உள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் குல்காமில் தாம்கால் காஞ்ச் போராவில் உள்ள போலீஸ் நிலையத்தில் போராட்டக்காரர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட போது தானியங்கி துப்பாக்கிகள் உள்பட 70  துப்பாக்கிகளை எடுத்து சென்றுவிட்டனர் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு உள்ளது. 

செவ்வாய்கிழமை, பாதுகாப்பு படையினரிடம் இருந்து துப்பாக்கியை பறிக்கும் செயலில் இரண்டு பிரிவினைவாதிகள் முயற்சித்தனர். திராலில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் காலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 கான்ஸ்டபிள்களை கடுமையாக தாக்கிய போராட்டக்காரர்கள் அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிக்க முயற்சித்து உள்ளனர். 

சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் கூறுகையில் ”நேற்று மாலையில் வன்முறை கும்பல் போலீசார் இருவரையும் கற்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு கொடூரமாக தாக்கி உள்ளனர், இருப்பினரும் இருவரும்  தங்களுடைய ஆயுதங்களை அவர்கள் பறித்து செல்லவிடவில்லை” என்று கூறினார்.

கடந்த சனிக்கிழமை போராட்டக்காரர்கள் பிரிஜ்பேகாராவில் இருந்த போலீஸ் நிலையத்தை சூறையாடினர், அவர்கள் அங்கிருந்த ஆயுதங்களை எடுத்துச் சென்றனர். போராட்டத்தின் போது  இளைஞர்கள் ஆயுதங்களை குறிவைத்து, அதனை பறித்து உள்ளனர். 

பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகையில் பறிக்கப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் கடைசியில் உள்ளூர் பயங்கரவாதிகளிடம் போய் சேரும். ஏற்கனவே பாகிஸ்தானின் உளவுத்துறை இந்தியாவிற்கு அனுப்பும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளுடன் போரிட்டுவரும் இந்திய படைகளுக்கு அச்சுறுத்தல் கூடுகிறது. ஜம்மு காஷ்மீரில் மோசமான நிலை நிலவிவரும் நிலையில் ஆயுதங்கள் பறிப்பு என்பது பாதுகாப்பு படைக்கு புதிய பிரச்சனையாகி உள்ளது என்று கூறிஉள்ளன

Trending News