நாம் யார் என்பதை, பெரும்பாலான சமயங்களில் நாம் செய்யும் வேலைகள்தான் தீர்மானிக்கின்றன. நம் மனதுக்கு பிடித்த, நல்ல விஷயங்களை செய்யும் போது நாமும் சூப்பரான மனிதராக மாறலாம். அவை என்னென் விஷயங்கள் தெரியுமா?
1.நிகழ்காலத்தில் வாழ்வது:
நம்மில் பலர், கடந்த காலத்தை நினைத்து பயந்து கொண்டும், எதிர்காலத்தை நினைத்து பயந்து கொண்டும் இருக்கிறோம். அப்படி இல்லாமல், இப்போது என்ன நடக்கிறதோ, அந்த நிகழ் காலத்தில் இருக்க பழகிக்கொள்ள வேண்டும். இது, உங்களை இன்னும் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அழைத்து செல்லும். அதே போல, வாழ்வில் நடக்கும் சிறு சிறு விஷயங்களை நினைத்து பெருமை படவும், மகிழ்ச்சியடையவும் இது வழிவகுக்கும். அது மட்டுமல்ல, இந்த முறையை பின்பற்றி இருக்க ஆரம்பித்து விட்டால் கண்டிப்பாக நமது நினைவு திறனும் அதிகரிக்குமாம்.
2.நன்றியுணர்வு:
ஒரு சிலர், தனக்கு வாழ்வில் என்ன கிடைத்திருந்தாலும், அது குறித்து மகிழ்ச்சி அடையாமல் கிடைக்காத விஷயத்தை நினைத்து ஏக்க பெருமூச்சுகளை விட்டுக்கொண்டிருப்பர். உங்கள் கையில் பணம், பொருள், காதல், கனவு என எதுவுமே இல்லை என்றால் கூட, இப்போது என்ன இருக்கிறதோ அந்த விஷயங்களுக்கு நன்றி உணர்வுடன் இருப்பது மிகவும் அவசியம் ஆகும். இது, உங்கள் மனதை நெகடிவாக யோசிக்க விடாமல், மனநிலையை வேறு பக்கமாக திசை திருப்பும். அப்படி செய்தால், உங்கள் வாழ்வின் மீதிருக்கும் பார்வையே நல்லதாக மாறிவிடும்.
மேலும் படிக்க | இந்திய பெண்களுக்கு கொரிய ஆண்களை பிடிப்பது ஏன்? காரணம் ‘இது’தான்..!
3.உணர்ச்சிகளுடன் உரையாடுதல்:
கோபம், காதல், வெறுப்பு, அன்பு என எந்த உணர்வாக இருந்தாலும் அதை “அப்பறம் பாத்துக்கலாம்” என்ற எண்ணத்தோடு இருக்கிறோம். ஆனால், அது மொத்தமாக ஒரு நாள் நம்மை காலி செய்து விட்டு போய்விடும். எனவே, உங்கள் உணர்ச்சிகள் உங்களிடம் என்ன சொல்ல வருகிறது என்பதையும், உங்களை எந்த விஷயம் சோகமாக்குகிறது, கோபமாக்குகிறது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏட்டுக்கல்வியுலும், எழுத்துக்கல்வியிலும் புத்திசாலியாக இருந்துவிட்டால் போதாது. உணர்ச்சி அறிவும் மேலோங்கி இருந்தால்தான் நம்மால் புத்திசாலியாக மாற முடியும்.
4.சுய ஒழுக்கம்:
சுய ஒழுக்கம், உங்களை ஒரு நல்ல மனிதராக மாற்றும் சக்தியை கொண்டதாக இருக்கிறது. இது, உங்கள் வாழ்வில் நீங்கள் முக்கிய தருணத்தில் முடிவெடுக்கவும், உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை நோக்கி செல்லவும் தூண்டும். அது மட்டுமல்ல, தன்னம்பிக்கையை பன்மடங்காக வளர்க்கவும் நாம் சுய ஒழுக்கமாக இருப்பது மிகவும் அவசியம் ஆகும். ஒருவர், தனது மனம்-உடல்-பொருள் என அனைத்தையும் தூய்மையாக வைத்திருக்க சுய ஒழுக்கத்துடன் இருக்கலாம்.
5.மன்னிப்பு:
கோபம், வன்மம், பகையுணர்வு, இகழ்ச்சி என பல்வேறு தேவையற்ற உணர்வுகளை நாம் மாட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கிறோம். நம்மை ஒருவர் இகழ்ந்து பேசினாலும் சரி, நம் மனதை யாரேனும் சுக்கு நூறாக உடைத்திருந்தாலும் சரி, அந்த வலியையும்-வலியை கொடுத்தவர்களையும் மனதில் வைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. கசப்பான கடந்த காலம் இருப்பது ஒன்றும் குற்றமில்லை.
ஆனால், அதுவே உங்கள் வருங்காலத்தையும் மாற்றிவிட கூடாது. எனவே, அந்த காயங்களுக்கு மருந்து போட்டுக்கொள்ள, முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, பிறரை மன்னிப்பதுதான். அவர்கள் உங்களிடம் ஏற்கனவே வந்து மன்னிப்பு கேட்டிருந்தாலும் சரி, இல்லை என்றாலும் பரவாயில்லை. உங்களை நீங்கள் முன்னேற்றிக்கொள்ள இதை செய்வது அவசியம் ஆகும்.
மேலும் படிக்க | அதிகமாக கோபம் வருகிறதா? ஆபத்து உங்களுக்கு தான்! கட்டுப்படுத்துவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ