கடலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார் அப்போது,
அதிமுக தொண்டர்களின் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் அவர் தொண்டர்களுக்குஒரு குட்டிக்கதை சொன்னார். ஒரு காட்டில் இருக்கும் ஒரு பெரிய ஆலமரம், தனது நிழலில் ஒதுங்கும் பறவை, விலங்கு, மனிதர்களிடம் எப்போதும் தனது பெருமையை கூறிக்கொண்டு இருக்கும். ஒரு நாள் முனிவர் ஒருவர் அந்த மரத்தடியில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது வழக்கம் போல் அந்த முனிவரிடம் மரம் தனது பெருமைகளை கூறியது. எனது நிழலில் தான் சிங்கம், புலி, கரடி, யானை எல்லாம் படுத்து ஓய்வு எடுக்கின்றன.
சென்னை தலைமை செயலகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார். சென்னையில் இந்தியாவின் 71-வது சுதந்திர தினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். முன்னதாக ராஜாஜி சாலையில் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதல்வர் எடப்பாடியார் பார்வையிட்ட அணிவகுப்பில் ஆந்திரா காவல்துறையினர் முதல் முறையாக பங்கேற்றனர்.
இந்திய நாட்டின் 71-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி உரையாற்றினார்.
இந்நிலையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார். சென்னையில் இந்தியாவின் 71-வது சுதந்திர தினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். முன்னதாக ராஜாஜி சாலையில் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொண்டார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. அம்மா அணி துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரனை 420 என குறிபிட்டுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற குடியரசு துணைதலைவர் பதவியேற்பு விழாவிற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது.
தன்னை 420 என்று டிடிவி தினகரன் கூறியது அவருக்கே பொருந்தும் என தெரிவித்தார், மேலும் அணிகள் இணைப்பு குறித்து கேட்டதற்கு, அ.தி.மு.க. பொது செயலளராக சசிகலா மற்றும் தினகரன் கழக பதவியில் இருப்பதை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொல்லவில்லை எனவும், தொண்டர்கள் விரும்பும் முடிவு விரைவில் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பீகார் மாநில முதல்வராக இன்று மீண்டும் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வராக பாஜகவின் சுசில் குமார் மோடி பதவியேற்றனர்.
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரான நிதிஷ் குமார் பீகார் மாநிலத்தின் முதல்வராக நீடித்து வந்தார். துணை முதல்வராக லாலுவின் மகன் தேஜஸ்வி இருந்து வந்தார்.
என்னால் ஊழலைப் பொறுக்க முடிய வில்லை அதனால்தான் நான் ராஜினாமா செய்தேன் என்று என்று நிதீஷ் குமார் கூறியுள்ளார்.
லாலு குடும்பத்துக்கும் - நிதீஷுக்கும் இடையிலான மோதலின் காரணாமாக நிதீஷ் குமாரும், அவரது கட்சி அமைச்சர்களும் அதிரடியாக பதவிகளை ராஜினாமா செய்தனர்.
பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதீஷ்குமார், ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுயது:-
பீகார் முதல்வராக நிதிஷ்குமார் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்றார். நிதிஷ் மற்றும் சுஷில் மோடி இருவர் மட்டுமே இன்று பதவியேற்ப்பு. பீகாரில் நிதிஷ் குமாருக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ள கவர்னர், நிதிஷ் குமார் தனது பெரும்பான்மையை நிரூபிக்க 2 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்.
பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் மாநில முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் திரிபாதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சிறை அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பிலிருந்து லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது ஏன் என்று திமுக செய்ய தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் சேவை வழித்தடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர்:-
சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயிலின் 4-வது வழித்தடம் அமைக்கப்படும்.
இதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்து அளிக்கும்படி மெட்ரோ நிறுவனத்திடம் கோரப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
மேலும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்திட சாத்திய கூறுகள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மணல் இணைய சேவை இணையதளத்தையும், செல்லிடப்பேசி செயலியையும் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-
சென்னை வர்த்தக மையத்தில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் ஜூன் 21-ம் தேதி இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக. (அம்மா) அணி எம்.பி. அன்வர் ராஜா நிருபர்களிடம் கூறியது:-
சட்டசபையில் இன்று கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் பொன்முடி பேசினார்.
அப்போது கல்வித்துறைக்கு மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி ரூ.4,503 கோடி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் பலவேறு துறைகளின் சார்பில் மத்திய அரசு ரூ.17 ஆயிரம் கோடி தரவேண்டி உள்ளது. அதை நாங்கள் வற்புறுத்தி உள்ளோம். விரைவில் கிடைக்கும். என்றார்.
சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்ததும் இன்று மாலை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.
அதிமுகவின் பல்வேறு நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் தினகரனை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்ட 34 எம்எல்ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தென்காசி தொகுதி எம்.பி., வசந்தி முருகேசனும் நேற்று காலை தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியும், கடலில் மீன் பிடிக்கும் போது படகு கவிழ்ந்தும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் இன்று நிதியுதவி வழங்கினார்.
இதைக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நடிகை வரலட்சுமி சரத்குமார் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்தார். அப்போது பெண்கள் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அது பற்றிய விவரங்களை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டு அறிந்தார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
தமிழக அமைச்சரவைக் கூட்டம், இன்று மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபை கூட்டம், வரும், 14-ம் தேதி துவங்க உள்ளது. கூட்டத்தொடரில், துறை வாரியாக, மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும். விவாதத்திற்கு, துறை அமைச்சர்கள் பதில் அளிப்பதுடன், துறையில் புதிதாக செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவர்.
இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம், தலைமை செயலகத்தில், இன்று மதியம் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.
இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் 3-வது தென் மண்டல மாநாட்டை சென்னையில் நேற்று தொடக்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர்.
அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் சார்பில் மூன்றாவது தென் மண்டல மாநாட்டை சென்னையில் சனிக்கிழமை தொடக்கி வைத்து அவர் ஆற்றிய உரை.
கடந்த 2015-ம் ஆண்டு உலகமே பாராட்டும் வகையில், உலக முதலீட்டாளர் மாநாடு மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த மாநாட்டினை செம்மையான முறையில் நடத்திட சிஐஐ சிறப்பான பணிகளை ஆற்றியது.
தமிழக அமைச்சரவையில் எந்த மாற்றமும் இல்லை என தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஏற்காடு கோடை விழாவை தொடக்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் :-
மாட்டிறைச்சி விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது குறித்து அரசாணை வந்தபிறகுதான் சரியான பதில் சொல்ல முடியும். மக்களிடத்தில் செல்வாக்கு மிக்க, மக்களுக்கு உழைத்து மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப் படம் சட்டப் பேரவையில் திறக்கப்படும். இதில் எந்தவித தவறும் இல்லை.
மேலும் கட்சியின் வளர்ச்சிப் பணியைப் பற்றி பேச மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை சென்னையில் திங்கள்கிழமை கூட்டுகிறோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.