டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருடப்பட்டதை அடுத்து, டெல்லி போலீஸ்க்கு நன்றி சொன்ன கெஜ்ரிவால்,
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் படி, டெல்லி தலைமை செயலகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருட்டு போய் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கார் ப்ளூ வேகன் ஆர் மாடல் உடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக்குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: இதுதான் டெல்லி போலீஸ். அவர்களின் அலச்சியத்திற்க்கு மிக்க நன்றி. உங்களுடைய கவனம் எங்கு இருக்கிறது? என்று கூறியுள்ளார்.
டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் டெல்லியில் திருடப்பட்டுள்ளது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் படி, டெல்லி தலைமை செயலகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருட்டு போய் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கார் ப்ளூ வேகன் ஆர் மாடல் உடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைநகரத்தில், அதுவும் தலைமை செயலகத்திற்கு அருகில் முதல்-அமைச்சரின் கார் திருடப்பட்டுள்ளது என்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று 30 கழிவு சுத்திகரிப்பு இயந்திரங்களின் முன்னோட்டத்தினை துவங்கி வைத்தார்.
இந்த 30 இயந்திரங்களில் கழிவு சேகரிப்பு லாரிகள், மரம் கத்தரித்து இயந்திரங்கள், சாலை துப்புரவு மற்றும் இதர துப்புரவு இயந்திரங்கள் என மொத்தம் 30 இயந்திரங்கள் அடங்கும்.
Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu flagged off 30 solid waste management machines in Amaravati pic.twitter.com/WJBfxIzuhu
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நடந்து வந்த பிரம்மோற்சவம் விழா நேற்று நிறைவு பெற்றது. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திருமலையில் சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் புறப்பட்டு செல்கிறார்.
இவர்கள் இன்று இரவு திருமலையில் உள்ள முக்கிய விருந்தினர் தங்கும் விருந்தினர் மாளிகையில் தங்குகின்றனர். நாளை காலை 6.30 மணிக்கு பிரேக் தரிசனம் முறையில் சாமி தரிசனம் செய்கின்றனர்.
பேரறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாளையொட்டி, தேமுதிக சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதுகுறித்து தேமுதிக விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளதாவது;-
தேமுதிக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினோம். pic.twitter.com/v15lG2n8fy
பேரறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் அவரது திருவுருவ சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
அறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவர்கள் மரியாதை செலுத்தினர். இதேபோல் தமிழகம் முழுவதும் அறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (13.9.2017) முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ள 1013 உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 10 நபர்களுக்கு உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
அதைக்குறித்து தமிழக அரசு இதழில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
வண்டலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினை குறித்த ஓ.பி.எஸ் ட்விட்க்கு முதல்வர் இ.பி.எஸ் ரீ-ட்விட் செய்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவினை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மறு பதிவிட்டுள்ளார்.
நிகழ்ச்சி தொடர்பான ட்வீட்கள்:-
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ததை அடுத்து இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த பயணத்தில் சசிகலா மற்றும் தினகரன் நீக்கம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை சந்தித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
முன்னதாக இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் பங்கேற்றனர்.
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ததை அடுத்து நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னிர்செல்வம் நாளை டெல்லி பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த பயணத்தில் சசிகலா மற்றும் தினகரன் நீக்கம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை
சந்தித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
முன்னதாக இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் பங்கேற்றனர்.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் நிர்வாகிகள் கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அவை:-
#AIADMK resolutions. pic.twitter.com/W6AeipmgN4
அதிமுக அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இரண்டாக பிறிந்து இருந்த அதிமுக அணிகள் ஒன்றாக இணைந்த பிறகு தனக்கு எதிரானவர்கள் பலரையும் கட்சியில் இருந்து நீக்குவதாக தினகரன் தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
தனக்கு எதிரான எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களின் கட்சி பதவியை பறிப்பதாக அறிவித்து வந்த தினகரன் நேற்று முதல்வரையே கட்சி பதவியிலிருந்து நீக்குவதாக தினகரன் அறிவித்தார்.
சட்டசபை உரிமைக்குழு எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று டிடிவி தினகரன் அணி கூறியுள்ளது.
இரண்டாக பிறிந்து இருந்த அதிமுக அணிகள் ஒன்றாக இணைந்த பிறகு கட்சியில் பல்வேறு புதிய சர்சைகள் கிளம்பியது.
இதையடுத்து, அதிமுக-வை வழிநடத்த 15 பேர் கொண்ட குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* சசிகலா, டிடிவி தினகரன் செய்யப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செல்லாது.
* அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுவை விரைவில் கூட்ட முடிவு.
* சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க முடிவெடுத்து தீர்மானம்.
இரண்டாக பிறிந்து இருந்த அதிமுக அணிகள் ஒன்றாக இணைந்த பிறகு கட்சி பொறுப்பிலிருந்து தனக்கு எதிராக இருக்கும் பலரை நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்து வந்தார்.
அவர்களுக்கு பதிலாக தனது ஆதரவாளர்களை கட்சி பொறுப்பில் நியமிப்பதாகவும் அறிவித்தார். தினகரன் கட்சியிலேயே இல்லாத போது அவரின் நீக்கமும், புதிய உறுப்பினர்கள் நியமனமும் செல்லாது என அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பலரும் பதிலளித்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.