உ.பி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இந்து சமாஜ் கட்சி தலைவர் கமலேஷ் திவாரியின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.
நாளை (ஏப்ரல் 14) அம்பேத்கர் ஜெயந்தி முன்னிட்டு அசம்பாவிதச் சம்பவங்கள் தவிர்க்கும் விதமாக அனைத்து இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கையை விடுத்து உள்ளது.
உழவர்கள் தற்கொலைக்கு தீர்வு காண மத்திய, மாநில அமைச்சர்கள் அடங்கிய கூட்டு குழுவை அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதைக்குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை கூறியதாவது:-
இந்தியா முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான திட்டங்களை அடுத்த ஓராண்டில் செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு ஆணையிட்டிருக்கிறது. உழவர் நலனை பாதுகாக்கும் நோக்கம் கொண்ட உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியதாகும்.
புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தை மத்திய - மாநில அரசுகள் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதைக்குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டதாவது:
உலகம் முழுவதும் புகையிலைப் பொருட்களின் விற்பனையால் இளைஞர்களும், அப்பாவி பொதுமக்களும் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையை குறுகிய காலத்திலேயே இழக்கிறார்கள். குறிப்பாக இந்தியாவில் புகையிலை சார்ந்த நோய்களினால் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
ஓட்டல் விற்பனை வரி உயர்வு மற்றும் ஆன்லைன் மருந்து வர்த்தகம் ஆகியவற்றில் விரைந்து தீர்வு காண வேண்டும் என மத்திய-மாநில அரசுகளுக்கு மு.க ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுளா அறிக்கையில் கூறியதாவது:
மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி உயர்வைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் இன்றைய தினம் மூடப்பட்டு புதிய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று நெடுவாசல் கிராம மக்கள் சார்பில் பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில், அந்தத் திட்டம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.