கடந்த அக்டோபர் 2018-ல் மணிப்பூர் தலைநகரான இம்பால் நகரில் "அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்" (UFOs) வானில் பறந்ததாக வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. மந்திரப்ஹூரி என்ற கிராமத்தில் ஒரு மாணவர் விடுதி இருந்து வெளியே வரும் போது வானில் விசித்திரமான ஒரு பொருளை பார்த்ததாக உள்ளூர் வாசிகள் கூறினர். இது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. மேலும் இந்தியாவில் ஏலியன் நடமாட்டம் உள்ளதா? என்ற கண்ணோட்டத்திலும் பார்க்கப்பட்டது. இதனால் இதுக்குறித்து மக்களவை மற்றும் மாநிலங்கவையில் கேள்விகள் எழுப்பட்டன.
இந்த சம்பவம் நடைபெற்று மூன்று மாதங்கள் ஆன நிலையில், இதுக்குறித்து UFO sightings அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் "பொது மக்களால் வானில் பறந்ததாக கூறப்பட்ட "அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்" (UFOs) பெரும்பாலும் விமான நடவடிக்கைகள் அல்லது இயற்கை செயல்முறைகளுடன் இணைக்கப்பட்ட நிகழ்வாக தான் இருக்கின்றன. அவை நகரும் பொருளைப் பிரதிபலிக்கின்றன" என இன்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
மேலும் "தற்போது வரை இஸ்ரோ எந்த ஒரு யுஎஃப்ஒ-க்களை இந்தியாவில் இருப்பதற்க்கான அறிகுறி இல்லை," என்று அவர் கூறினார்.
"அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்" பற்றிய தகவல்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மீண்டும் மீண்டும் வந்த வண்ணம் உள்ளன.