தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் 'பேட்மேன் சவால்' அடுத்து இந்திய பெண்கள் மல்யுத்த அணியினர் சுகாதார பட்டைகள் (sanitary pads ) ஏந்தி புகைப்படம் ஒன்றினை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்!
காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பபிதா ஃபோகட் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இந்த புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... "பெண்கள் மல்யுத்த அணி இந்த சவாலை ஏற்றுக் கொள்கிறது, சோச் கெட்டல் ராஹி ஹே ..... சுகாதார பட்டைகளை பயன்படுத்துவதில் வெட்கப்பட வேண்டியதற்கு ஒன்றுமில்லை, இது இயற்கையான ஒன்று" என பதிவிட்டுள்ளார்.
Women wrestling team accept the challenge ,Soch badal rahi h .....nothing to be ashamed of,it's natural period #padman @Navjot35610922 @akshaykumar @mrsfunnybones @sonamakapoor and now we challenge to @BeingSalmanKhan @WrestlerSushil #itsnatural #period #padmanchallenge pic.twitter.com/B1KcIxLpjz
— Babita Phogat (@BabitaPhogat) February 10, 2018
பெண்களுக்கான மலிவு விலை சுகாதார அட்டைகளை உருவாக்கிய தமிழர் முருகானந்தம் அவர்களின் கதையினை, பாலிவுட்டில் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் தயாரித்து வெளியுட்டுள்ளனர்.
மக்களிடம் sanitary pads குறித்த விழிப்புனர்வு ஏற்பட்டுத்த இப்படகுழுவினர், பேட்மேன் சவால் என்ற ஒன்றினை அறிமுகப்படுத்தினர். இதன் விளைவாக இந்தியா முழுவதிலும் பிரபலங்கள் பலரும் sanitary pads ஏந்தி அந்த புகைப்படங்களை வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மல்யுத்த மகளிர் அணியினரும் இந்த சவாலினை ஏற்று தங்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்!