பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் ஓவியா. அதே போல் பிக் பாஸ் பட்டத்தை வென்ற ஆரவ், மக்களிடம் மிகவும் பிரபலமாவதற்கு காரணம் ஓவியாவும் ஒருவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை பிந்து மாதவிக்கும், நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கும் இடையேயான நட்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பிறகும் தொடர்கிறது.
100 நாட்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தனியார் டெலிவிஷனில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராம், வையாபுரி, சக்தி, பரணி, கஞ்சா கருப்பு, ஸ்ரீ, ஆரவ், கவிஞர் சினேகன், நடிகைகள் நமீதா, ஓவியா, அனுயா, காயத்ரி ரகுராம், ரைசா, ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகியோர் தொடக்க போட்டியாளர்களாக பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை பிந்து மாதவி, சுஜா வருணி, ஹரிஷ் கல்யாண் மற்றும் காஜல் பசுபதி ஆகியோர் இடைப்போட்டியாளர்களாக சேர்க்கப்பட்டனர்.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிளம்பராக பணியாற்றிய ஊழியர் மரணமடைந்துள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு மாதமாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி டிவி ரசிகர்களை ஈர்த்துள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டது.
இந்த செட்டின் பிளம்பராக வேலை செய்த மும்பையைச் சேர்ந்த கரீம் இப்ராஹிம் ஷேக் திடீரென்று இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வட இந்தியாவில் பிக்பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மிகவும் ஹிட் நிகழ்ச்சி ஆகும். விரைவில் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க போகிறார்.
இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், கிரிக்கெட் விளையாட்டு வீர்ர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ள நிலையில் இதற்கான படப்பிடிப்பும் தொடங்கிவிட்டன. பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செட்டில் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில் கமல்ஹாசன் தனது டிவிட்டரில் பிக்பாஸ் குறித்த 10 வினாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.