ஜம்மு-காஷ்மீரில் இருந்து திரும்பிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில், "பயங்கரவாதத்தின் வேர் எங்கே இருக்கிறதோ, அங்கே நாங்கள் நுழைவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தானை ’டெரரிஸ்தான்’ என இனி அழைக்கலாம் என ஐநா சபையினில் நேற்று கூறி பதிலடி கொடுத்த நிலையில் இன்று இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை(UNGA) வில் உரையாற்றுகிறார்.
சர்வதேச அமைப்புகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தும் ஸ்வராஜ் உரை, பாகிஸ்தானின் பயங்கரவாதம் மற்றும் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பாக்கிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கும் வகையினில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு சீனாவில் நடந்து வருகிறது. இதில் உறுப்பு நாடுகளான பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பங்கேற்றுள்ளன.
2-வது நாளான நேற்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பயங்கரவாத குழுக்கள் பற்றி பிரதமர் மோடி பேசினார். மேலும் பயங்கரவாதம் மிகுந்த கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது. பயங்கரவாதத்தில் ஈடுபடும் அமைப்புகளுக்கு தக்க பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்க இந்த அமைப்பு(‘பிரிக்ஸ்’ ) முடிவு செய்துள்ளன என பேசினார்.
இந்தியாவின் ஒரு பகுதியான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டங்கள் தீட்டி வருகின்றனர்.
பாகிஸ்தான் சர்வதேச அமைப்புகளிடமிருந்து பெறும் நிதியை பயங்கரவாதிகளுக்கு பயன்படுத்துகிறது என்று இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியா சார்பாக ஏனாம் காம்பீர் ஐ.நா.,வில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சர்வதேச அமைப்புகளிடம் கோடிக்கணக்கான டாலர் அளவுக்கு நிதியுதவி பெறும் பாகிஸ்தான் அவற்றில் பெரும்பாலானவற்றை பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கவும், நிதியுதவி மற்றும் ஆதரவு அளிக்கவுமே பயன்படுத்துகிறது. அவர்களை அண்டை நாடுகளில் வன்முறையை தூண்டி ஊக்குவிக்கிறது.
பிரதமர் மோடி பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜி-20 மாநாட்டில் பேசியது:- தெற்காசியாவில் ஒரு நாடு மட்டும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது. பயங்கரவாதத்திற்கு உதவி மற்றும் ஆதரவு கொடுப்பவரை தனிமைப்படுத்த வேண்டும்.
பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.