இலங்கைக்கு எதிரான சுற்றுபயணத்தில் இந்தியா இலங்கையினை தும்சம் செய்தது அனைவரும் அறிந்ததே.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும், 5-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரிலும் இலங்கையை வென்றது. மேலும் கடந்த புதன்று கொழும்புவில் நடைபெற்ற இறுதி டி20 போட்டியிலும் இலங்கையை ஒய்ட்வாஸ் செய்ததை அடுத்து இந்திய அணி தாயகம் திரும்பியது.
இந்நிலையில் தங்களது வெற்றி பயணத்தை பற்றி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா தனது ட்விட்டர் பக்கதினில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் 6-வது லீக்கில் போட்டியில் ஏ பிரிவு இடம் பெற்றுள்ள இங்கிலாந்தும், நியூசிலாந்தும் நேற்று மோதின.
சாம்பியன்ஸ் டிராபி ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், 87 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து அணி, தொடர்ச்சியாக 2-வது வெற்றியுடன் அரை இறுதிக்கு நுழைத்து.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் 6-வது லீக்கில் போட்டியில் ஏ பிரிவு இடம் பெற்றுள்ள இங்கிலாந்தும், நியூசிலாந்தும் இன்று மோதுகின்றன. போட்டி நடக்கும் கார்டிப்பில் நேற்று பலத்த மழை கொட்டியதால் ஆடுகளம் தார்ப்பாயால் மூடப்பட்டு இருந்தது. ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
இங்கிலாந்து அணி தனது தொடக்க ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வென்றது. நியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வெல்லும் நிலையில் இருந்த போது மழை கெடுத்து விட்டது. இதனால் அந்த ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டு தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொள்ள வேண்டியதாகி விட்டது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 38.4 ஓவரில் 189 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ரகானேவும், தவானும் களம் இறங்கினார்கள். இந்திய அணி 26 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. இதனால் அத்துடன் ஆட்டம் நிறுத்தப்பட்டது. விராட் கோலி 52 ரன்னுடனும், டோனி 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.
இந்த தொடருக்கு முன்னோட்டமாக இந்தியா இரண்டு பயிற்சி ஆட்டத்தில் மோதுகின்றது.
முதல் பயிற்சி ஆட்டம் லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியை இந்தியா 2-2 என டிரா செய்தது.
இந்நிலையில் இன்று இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் இந்தியா 3-0 என நியூசிலாந்தை வீழ்த்தியது.
முதல் பாதி நேரத்தில் ஹர்மன்ப்ரீத் சிங், மந்தீப் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 2-வது பாதி நேரத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் மேலும் ஒரு கோல் அடிக்க இந்தியா 3-0 என முன்னிலைப் பெற்றது.
நியூசிலாந்து வீரர்களால் எதிர்கோல் அடிக்க முடியாததால் இந்தியா 3-0 என வெற்றி பெற்றது.
நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. இந்தியா 2-வது வெற்றியைப் பெற்றுது. விராட் கோலி ஆட்டமிழக்காமல் 154 ரன்களும், தோனி 80 ரன்களும் குவித்து இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தனர்.
மொஹாலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. லாதம் (61), நீசம் (57), டெய்லர் (44) மற்றும் ஹென்றி (39) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 49.4 ஓவரில் 285 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.
பெரோசா கோட்லா மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி டெல்லி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. தர்மசாலாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
புதுடெல்லி: பெரோசா கோட்லா மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி டெல்லி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. தர்மசாலாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதின, முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. நியூசிலாந்து அணி 43.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் எடுத்தது.
பெரோசா கோட்லா மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி டெல்லி நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. தர்மசாலாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
நேற்று நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதின, முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இந்திய அணி டாஸ் வென்றது. நியூசிலாந்து அணி 43.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 321 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் ஹாட்ரிக் வெற்றி டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் 197 ரன்கள் வித்தி யாசத்தில் இந்தியா வென்றது. கொல்கத்தாவில் நடந்த 2-வது டெஸ்டில் 174 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 321 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் ஹாட்ரிக் வெற்றி டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் 197 ரன்கள் வித்தி யாசத்தில் இந்தியா வென்றது. கொல்கத்தாவில் நடந்த 2-வது டெஸ்டில் 174 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
பி.சி.சி.ஐ., மீதான தீர்ப்பை வரும் 17-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட்.
நீதிபதி லோதா தலைமையிலான குழு பி.சி.சி.ஐ.,க்கு பல்வேறு பரிந்துரைகள் செய்தது. இதை அமல்படுத்த பி.சி.சி.ஐ., தயக்கம் காட்டியது. இதனால், பி.சி.சி.ஐ., நிர்வாகிகளை ஒட்டுமொத்தமாக நீக்க வேண்டும் என லோதா குழு சார்பில் கூறப்பட்டது.
லோதா குழு நடவடிக்கை காரணமாக நியூசிலாந்து தொடர் நடப்பதில் சிக்கல்.
சுப்ரீம் கோர்ட் அமைத்த லோதா குழு பி.சி.சி.ஐ.,யில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. ஆனால் பி.சி.சி.ஐ., இதனை நிறைவேற்ற இதுவரை தயக்கம் காட்டி வருகிறது. இதனையடுத்து பரிந்துரை செய்யப்பட்ட மாற்றங்களை பி.சி.சி.ஐ., நிறைவேற்றவில்லை, எனவே பொறுப்பில் உள்ளவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் லோதா குழு கூறியுள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணை அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 316 ரன்களில் ஆட்டம் இழந்தது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் புவனேஷ்வர்குமார் 5 விக்கெட்டுகளும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், அஸ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து 112 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. இந்திய அணி 2-வது இன்னிங்சில் 263 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 375 ரன்கள் முன்னிலை பெற்றது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இந்தியா- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 318 ரன்களும், நியூசிலாந்து 262 ரன்களும் எடுத்தன. 56 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.
இந்த நிலையில், 5-வது மற்றும் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வந்தது. நியூசிலாந்து அணி 236 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.