2-வது ஒருநாள் போட்டி- இந்திய அணிக்கு 243 ரன்கள் இலக்கு

பெரோசா கோட்லா மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி டெல்லி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகியது. 

Last Updated : Oct 20, 2016, 06:19 PM IST
2-வது ஒருநாள் போட்டி- இந்திய அணிக்கு 243 ரன்கள் இலக்கு title=

புதுடெல்லி: பெரோசா கோட்லா மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி டெல்லி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகியது. 

இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையே 2-வது ஒருநாள் போட்டி டெல்லி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்து வீசுவதாக தெரிவித்தார். இதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது.

இதனையடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 50 ஒவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 118, லதாம் 46 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் தரப்பில் மிஸ்ரா, பூம்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆடிவருகிறது.

தர்மசாலாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

 

 

Trending News