இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 38.4 ஓவரில் 189 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ரகானேவும், தவானும் களம் இறங்கினார்கள். இந்திய அணி 26 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. இதனால் அத்துடன் ஆட்டம் நிறுத்தப்பட்டது. விராட் கோலி 52 ரன்னுடனும், டோனி 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
மழை தொடர்ந்து பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. அதன்படி இந்தியா 26 ஓவர் முடிவில் 84 ரன்கள் எடுத்திருந்தலே வெற்றிக்கு போதுமானது. ஆகையால் 45 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.