கோவையைச் சேர்ந்த முன்னனி இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி தமிழில் தனிஒருவன்,கவன்,அரண்மனை-2 போன்ற படங்ளுக்கு இசையமைத்திருக்கிறார்.மீசையை முறுக்கு என்ற படத்தில் கதநாயகனாக அறிமுகமானார்.
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நடந்து வந்த பிரம்மோற்சவம் விழா நேற்று நிறைவு பெற்றது. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திருமலையில் சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் புறப்பட்டு செல்கிறார்.
இவர்கள் இன்று இரவு திருமலையில் உள்ள முக்கிய விருந்தினர் தங்கும் விருந்தினர் மாளிகையில் தங்குகின்றனர். நாளை காலை 6.30 மணிக்கு பிரேக் தரிசனம் முறையில் சாமி தரிசனம் செய்கின்றனர்.
அஜீத் நடித்த ‘விவேகம்’ ஆகஸ்ட் 10ம் தேதி கண்டிப்பாக வெளியாகிறது என படக்குழு உறுதிபடுத்தியுள்ளது.
சிவா இயக்கத்தில், சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள ‘விவேகம்’ அஜீத்துடன், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘விவேகம்‘ அடுத்த மாதம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் விரைவில் தணிக்கை குழுக்கு படத்தை அனுப்ப உள்ளோம் எனவும் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திவ்ய தரிசனத்திற்கு தேவஸ்தானம் புதிய கட்டுப்பாடு.
நாளொன்றுக்கு சுமார் 10,000 பக்தர்கள் வந்த நிலையில், தற்போது பக்தர்களின் எண்ணிக்கை 45,000 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதனால் தரிசனத்திற்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் சூழல் உள்ளது.
எனவே பாதயாத்திரையாக வரும் 20 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே இனி திவ்ய தரிசன டோக்கன் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது
திருப்பதி கோயிலில் மலைப்பாதை பக்தர்களுக்கான தரிசனம் வார இறுதிகளில் ரத்து செய்யப்படும் திட்டத்தை நேற்று முதல் அமலுக்கு வந்தது.
திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் மிகவும் பிரசித்த பெற்ற கோயிலாகும். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பொதுவாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை தினம் என்பதால் வெள்ளிக்கிழமை மாலை முதல் திருப்பதியில் ஞாயிற்றுக்கிழமை வரை கூட்டம் அதிகமாகவே காணப்படும்.
தற்போது விஐபி தரிசனம், ரூ.50 கட்டண தரிசனம், ரூ.300 விரைவு தரிசனம், திவ்ய தரிசனம் ஆகிய வகைகளில் ஏழுமலையானை மக்கள் தரிசித்து வருகின்றனர்.
திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே லட்டு வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆதார் அட்டை இருந்தால் தான், திருப்பதி கோவிலில் லட்டு வழங்க முடியும் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
தற்போது, சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஆன்லைன் மூலம் சுவாமி தரிசனம், தங்கும் அறைகள் முன்பதிவு செய்பவர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் ஆதார் அட்டையை கட்டாயமாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை என்.எஸ்.ஏ., உருவாக்கிய இணையவழி தாக்குதல்களை நடத்துகிற ஆற்றல் வாய்ந்த டூல்களை கொண்டு, இந்தியா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ஊடுருவி ‘வான்னா கிரை’ என்ற வைரஸ் தாக்குதல் நடத்தப்படுகிறது.
இந்தியாவில் மேற்கு வங்காளம், கேரளா, ஆந்திர பிரதேசம், குஜராத் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது.
பெருமாளுக்கு உகந்த பண்டிகையான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளைய தினம் அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் சொர்க்க வாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தற்காலிகமாக மூடப்பட்ட திருப்பதி விமான நிலையம் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
வர்தா’ புயல் காரணமாக விமான சேவைகள் நேற்று முடங்கியுள்ளன.
இந்நிலையில் திருப்பதி விமான நிலையம் ‘வர்தா’ புயல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டு இருந்தது. புயல் காற்று மற்றும் மழை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட திருப்பதி விமான நிலையம் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.