வார இறுதியில் மலை பாதை தரிசனம் இனி திருப்பதியில் ரத்து

Last Updated : Jul 9, 2017, 09:37 AM IST
வார இறுதியில் மலை பாதை தரிசனம் இனி திருப்பதியில் ரத்து title=

திருப்பதி கோயிலில் மலைப்பாதை பக்தர்களுக்கான தரிசனம் வார இறுதிகளில் ரத்து செய்யப்படும் திட்டத்தை நேற்று முதல் அமலுக்கு வந்தது. 

திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் மிகவும் பிரசித்த பெற்ற கோயிலாகும். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

பொதுவாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை தினம் என்பதால் வெள்ளிக்கிழமை மாலை முதல் திருப்பதியில் ஞாயிற்றுக்கிழமை வரை கூட்டம் அதிகமாகவே காணப்படும். 

தற்போது விஐபி தரிசனம், ரூ.50 கட்டண தரிசனம், ரூ.300 விரைவு தரிசனம், திவ்ய தரிசனம் ஆகிய வகைகளில் ஏழுமலையானை மக்கள் தரிசித்து வருகின்றனர். 

திவ்ய தரிசனம் அதாவது மலை பாதை வழியாக நடந்தே சென்று சுவாமியை தரிசிப்பதாகும். இதில் இரு வழிகள் உள்ளன. ஒன்று அலிபிரி வழியாக திருமலை சென்றடைவது, மற்றொன்று ஸ்ரீ வாரி மெட்டு வழியாக செல்வதாகும்.

அலிபிரி என்பது 3550 படிக்கட்டுகளை கொண்டது. இங்கிருந்து மேலே செல்ல 11 கி.மீ. தூரம் ஆகும். ஸ்ரீ வாரி மெட்டு. ஸ்ரீ வாரி மெட்டில் வழியாக திருமலை செல்ல 2384 படிக்கட்டுகள் மட்டுமே உள்ளன. 

விரைவு தரிசனம் இந்த இரு வழியாகவும் நடந்து செல்லும் பக்தர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நோக்கில் பிரத்யேக தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. இதன் மூலம் திருமலையில் கூட்டத்துக்கு தகுந்தபடி மற்றவர் தரிசன முறைகளைக் காட்டிலும் இதில் விரைந்து சென்று ஏழுமலையானை தரிசிக்கலாம். இதனால் பெரும்பாலானோர் இந்த வழியை தேர்ந்தெடுக்கின்றனர். 

இந்நிலையில் கூடத்தை கட்டுப்படுத்த ஜூலை 7-ம் தேதி முதல் வார இறுதி நாள்களில் திவ்ய தரிசன நேரத்தை ரத்து செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி நேற்று நள்ளிரவு முதல் இனி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் மலை பாதை தரிசனத்தை ரத்து செய்தது. 

Trending News