திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திவ்ய தரிசனத்திற்கு தேவஸ்தானம் புதிய கட்டுப்பாடு.
நாளொன்றுக்கு சுமார் 10,000 பக்தர்கள் வந்த நிலையில், தற்போது பக்தர்களின் எண்ணிக்கை 45,000 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதனால் தரிசனத்திற்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் சூழல் உள்ளது.
எனவே பாதயாத்திரையாக வரும் 20 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே இனி திவ்ய தரிசன டோக்கன் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது
மற்றவர்கள் பொதுப் பாதையில் சென்று தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. பொது தரிசன பக்தர்கள் வழியில் அனைவரும் அனுமதிக்கப்பட்டால், பெருமாளை தரிசனம் செய்வதற்காக வெகு நேரம் பக்தர்கள் காத்துக் கிடப்பது இன்னும் அதிகமாகும்.