பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்தக்கொள்பவர்களை கண்காணிக்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் சமூக விரோதிகள் அரங்கேற்றும் வன்முறை சம்பவங்களைத் தடுக்க சமூக ஆர்வலர் தெக்சீன் பூனவல்லா சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த சுப்ரீம் கோர்ட் பசு பாதுகாப்புப்பின் பெயரால் தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக விளக்கமளிக்க ஆறு மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டது.
செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அரசின் சமூக நல திட்டங்களை பெற ஆதார் எண்ணை இனைப்பது கட்டாயம் என மத்திய அரசு ஏற்கனவே கூறி இருந்தது. மேலும் இதற்க்கான காலக்கெடுவை நீட்டிக்கும் எண்ணம் ஏதும் இல்லை எனவும் கூறி இருந்தது.
நீண்ட நாளாக இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
டெல்லியில் சுப்ரீம் கோர்ட் 45-வது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இன்று பதிவியேற்றார். இவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஜே.எஸ். கேஹரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.
முன்னதாக சட்ட விதிகளின்படி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்த பரிந்துரையை அளிக்கும்படி, கேஹரிடம் மத்திய சட்ட அமைச்சகம் கேட்டிருந்தது. அதன்படி, சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ராவின் பெயரை சட்ட அமைச்சகத்திடம் கேஹர் பரிந்துரைத்தார்.
ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இதனை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பு வழங்கியது.
அதில், இந்திய அரசியல் சாசனத்தின்படி, தனி மனித ரகசியம் காப்பது என்பது அடிப்படை உரிமையே என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றே என்று சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்து உள்ளது.
ஆதார் அட்டை அடிப்படை உரிமையா என கேட்டு தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
வருமான வரி தாக்கல், பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு, மொபைல் எண் பெறுவது, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களுக்கும் ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு கூறி வருகிறது.
தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை வரும் செப்டம்பர் 4-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிற்பித்துள்ளது.
நீட் தேர்வுக்கான தமிழகத்தின் அவசர சட்டத்திற்கு எதிராகவும், உடனடியாக நீட் தேர்வு மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும் என நளினி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 17-ம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தமிழக அரசு மற்றும் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார்கள்.
தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை வரும் செப்டம்பர் 4-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிற்பித்துள்ளது.
நீட் தேர்வுக்கான தமிழகத்தின் அவசர சட்டத்திற்கு எதிராகவும், உடனடியாக நீட் தேர்வு மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும் என நளினி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு கடந்த 17-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்பொழுது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசு மற்றும் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார்கள்.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய முத்தலாக் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.
இஸ்லாமிய பெண்களுக்கு விவகாரத்து வழங்கும் முத்தலாக் முறை செல்லாது என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறியுள்ளது. மேலும் இவ்விவகாரத்தில் இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை இல்லாத வகையில் பார்லிமென்ட்டில் சட்டம் இயற்ற சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. மதம் தொடர்பான விவகாரங்களில் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.
மதம் தொடர்பான விவகாரங்களில் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாது. இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை இல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய முத்தலாக் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.
முஸ்லிம் மதத்தை சேர்ந்த தனது மனைவியை விவாகரத்து செய்ய மூன்று முறை 'தலாக்' கூறும் 'முத்தலாக்' முறை அமலில் உள்ளது. இந்த நடைமுறையால் பாதிப்படைந்த முஸ்லிம் பெண், இம்முறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய முத்தலாக் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
முஸ்லிம் மதத்தை சேர்ந்த தனது மனைவியை விவாகரத்து செய்ய மூன்று முறை 'தலாக்' கூறும் 'முத்தலாக்' முறை அமலில் உள்ளது. இந்நடைமுறையால் பாதிப்படைந்த முஸ்லிம் பெண், இம்முறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் 'முத்தலாக்' முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும், முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பறிக்கிறது எனவும் அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்திருந்தது. இதனையடுத்து இவ்விவகாரம் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்றது.
நீட் அவசர சட்டம் தொடர்பாக தலைமை வழக்கறிஞர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. மேலும் பிற்பகல் 2 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது என இன்று சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.
நீட் தேர்வு முடிவுக்கு எதிராக மாணவ அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கோர்ட், நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது.
நீட் தேர்வில் மாறுபட்ட கேள்விதாளை வழங்கியது ஏன் சி.பி.எஸ்.இ.,யின் இந்த செயல் ஏற்று கொள்ள முடியாது. இதுபோன்ற தவறுகள் வருங்காலத்தில் ஏற்படாமல் இருக்க வேண்டியவை பற்றி அறிக்கை அளிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
நீர் சேமிப்பு திட்டங்களில் தமிழக அரசு கவனம் செலுத்தாதது ஏன் என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
காவிரி நீர்ப்பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்டில் இன்று நடைபெற்றது. அதில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால், போதிய நீரின்றி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரில் உப்பு கலந்து காணப்படுவதால், அதையும் பயன்படுத்த இயலாத சூழல் நிலவுவதாக குறிப்பிட்டார். மேலும் கர்நாடகா தர வேண்டிய காவிரி நீரும், அவர்கள் செய்யும் தவறான சாகுபடியால் வீணடிக்கப்பட்டு கிடைப்பதில்லை என்று கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா நேற்று நியமிக்கப்பட்டு உள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக தற்போது பதவி வகித்து வரும் ஜே.எஸ். கேஹரின் பதவிக்காலம் வரும் 27-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.
இதையடுத்து, சட்ட விதிகளின்படி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்த பரிந்துரையை அளிக்கும்படி, கேஹரிடம் மத்திய சட்ட அமைச்சகம் கேட்டிருந்தது. அதன்படி, சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ராவின் பெயரை சட்ட அமைச்சகத்திடம் கேஹர் பரிந்துரைத்தார்.
அயோத்தி ராமர் கோயில் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரமாண பத்திரம் ஷியா வக்ஃபு வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பிரமாண பத்திரத்தில் அயோத்தியில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள இடத்தில் மசூதி அமைக்கலாம் என்றும் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் மசூதி அமைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதியான முறையில் பிரச்சனைக்கு முடிவு காண தயார் என ஷியா வக்ஃபு வாரியம் பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் அணைத்து மாணவர்களுக்கு யோகா பயிற்சியை கட்டாயமாக்க உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் டெல்லி பாஜக செய்தித்தொடர்பாளர் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
மாணவர்களின் நலன் காக்கும் விதமாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அனைத்து பள்ளிகளுக்கும் இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
வரதட்சணை புகாரில் சம்பந்தபட்டவரை உடனடியாக கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. அதாவது 1983-ம் ஆண்டில் கட்டமைக்கப்பட்ட வரதட்சணை கொடுமைப்படுத்துதல் சட்டத்தை தவறாக பயன்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்ற இந்த உத்தரவை தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 498 ஏ (ஐபிசி) பிரிவின் கீழ் வரதட்சணை வழக்கில் கைது செய்யப்பட்டு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் ஆஜார் படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆரம்ப விசாரணையை நடத்தாமல் "கட்டாய கைது நடவடிக்கை" எடுக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் நடுவர்மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கின் இறுதி விசாரணை தொடங்கி உள்ளது.
2-வது நாளான நேற்று நடுவர் மன்றம் மீண்டும் காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை விசாரிக்க வேண்டும் என மாநில அரசுகள் கூறின.
அப்பொழுது நீதிபதிகள் கூறியது,
ஆதார் அட்டை தொடர்பான வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இன்று மாற்றப்பட்டுள்ளது.
அரசின் திட்டங்கள் மற்றும் மானியங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவானது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதில், வரும் செவ்வாய், புதன்கிழமைகளில் ஆதார் எண் தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடனை வசூலிக்கும் போது விவசாயிகளை கட்டாயப்படுத்தவோ, அவர்களின் பொருட்களை ஜப்தி செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக விவசாயிகள் தற்கொலை தடுக்க நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், விவசாயிகள் நலன் சார்ந்த பிரச்னைகளில் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும். விவசாய கடனை வசூலிக்கும் போது விவசாயிகளை கட்டாயப்படுத்தி வசூலிக்கவோ, அவர்களின் பொருட்களை ஜப்தி செய்யக் கூடாது என்று இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.