நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய முத்தலாக் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
முஸ்லிம் மதத்தை சேர்ந்த தனது மனைவியை விவாகரத்து செய்ய மூன்று முறை 'தலாக்' கூறும் 'முத்தலாக்' முறை அமலில் உள்ளது. இந்நடைமுறையால் பாதிப்படைந்த முஸ்லிம் பெண், இம்முறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் 'முத்தலாக்' முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும், முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பறிக்கிறது எனவும் அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்திருந்தது. இதனையடுத்து இவ்விவகாரம் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்றது.
இவ்வழக்கினை தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான, 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், முத்தலாக் விவகாரத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.