வங்கி கடனை வசூலிக்க விவசாயிகளை கட்டாயப்படுத்தக் கூடாது - சுப்ரீம் கோர்ட்

Last Updated : Jul 7, 2017, 01:55 PM IST
வங்கி கடனை வசூலிக்க விவசாயிகளை கட்டாயப்படுத்தக் கூடாது - சுப்ரீம் கோர்ட் title=

கடனை வசூலிக்கும் போது விவசாயிகளை கட்டாயப்படுத்தவோ, அவர்களின் பொருட்களை ஜப்தி செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக விவசாயிகள் தற்கொலை தடுக்க நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், விவசாயிகள் நலன் சார்ந்த பிரச்னைகளில் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும். விவசாய கடனை வசூலிக்கும் போது விவசாயிகளை கட்டாயப்படுத்தி வசூலிக்கவோ, அவர்களின் பொருட்களை ஜப்தி செய்யக் கூடாது என்று இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கியுள்ளது.

மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை அடுத்த மாதம்(ஆகஸ்ட்) 4-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Trending News