தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றே என்று சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்து உள்ளது.
ஆதார் அட்டை அடிப்படை உரிமையா என கேட்டு தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
வருமான வரி தாக்கல், பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு, மொபைல் எண் பெறுவது, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களுக்கும் ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு கூறி வருகிறது.
ஆதார் தொடர்பான படிவங்களில் எத்தனை முறை திருமணம் ஆகி உள்ளது, யாருடன் எல்லாம் திருமணம் ஆகி உள்ளது என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என கருத்து எழுந்தது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரித்த சுப்ரீம் கோர்டின் 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்சில் தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமையே என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆதார் அட்டையை அரசியல் சாசன ரீதியில் அங்கீகரிக்க கூடாது என காரக் சிங், எம்.பி.சர்மா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.