பாபர் மசூதி விவகாரம்: ஷியா வக்ஃபு பிரமாண பத்திரம் தாக்கல்

Last Updated : Aug 8, 2017, 04:59 PM IST
பாபர் மசூதி விவகாரம்: ஷியா வக்ஃபு பிரமாண பத்திரம் தாக்கல் title=

அயோத்தி ராமர் கோயில் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரமாண பத்திரம் ஷியா வக்ஃபு வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த பிரமாண பத்திரத்தில் அயோத்தியில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள இடத்தில் மசூதி அமைக்கலாம் என்றும் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் மசூதி அமைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் பிரச்சனைக்கு முடிவு காண தயார் என ஷியா வக்ஃபு வாரியம் பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளனர். 

உபி மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992–ம் ஆண்டு இடிக்கப்பட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி - பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக உள்ளது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு யோசனை தெரிவித்தது.  

இந்நிலையில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் என ஷியா வக்ஃபு வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து உள்ளது.

Trending News