ஜேஇஇ (JEE) மெயின் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. www.cbseresult.nic.in என்ற இணையத்தளத்தில் முடிவுகளை அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., ஐ.ஐ.டி. ஆகிய மத்திய அரசு நிதியுதவியின் கீழ் இயங்கி வரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவன படிப்புகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு, சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வு இரண்டு நிலைகளாக நடத்தப்படுகிறது. முதலில் ஜேஇஇ முதல் நிலைத் தேர்வும், பின்னர் ஏதாவது ஒரு ஐஐடி சார்பில் ஜேஇஇ முதன்மைத் தேர்வும் நடத்தப்படும்.
இந்நிலையில் 2017-ம் ஆண்டுக்கான ஜேஇஇ முதல் நிலைத் தேர்வுக்கான நேரடி எழுத்துத் தேர்வு கடந்த 2-ம் தேதியன்றும், கணினி அடிப்படையிலான தேர்வு ஏப்ரல் 8, 9 தேதிகளிலும் நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதிலுமிருந்து 11 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.