சென்னை: சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்கள் தற்போது 5 பாடங்கள் படித்து வருகிறார்கள். அடுத்த கல்வி ஆண்டு முதல் 6 பாடங்களை படிக்க வேண்டும். அதாவது மொழிப்பாடம்-1, மொழிப்பாடம்-2, அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களோடு கூடுதலாக தொழில்கல்வி பாடம் ஒன்றையும் எடுத்து படிக்க வேண்டும்.
அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்களில் ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அதற்கு பதிலாக விருப்ப பாடம் பார்க்கப்படும்.
தொழில் கல்வி பாடத்தில் தகவல் தொழில்நுட்பம், டைனமிக் ஆப் ரீடெய்லிங், செக்யூரிட்டி, உணவு உற்பத்தி, மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ், உடல்நல ஆரோக்கியம் உள்ளிட்ட 13 வகையான படிப்புகள் உள்ளன. இந்த படிப்பில் ஏதாவது ஒரு படிப்பை எடுத்து படிக்க வேண்டும்.
இது குறித்து சி.பி.எஸ்.இ. தலைவர் ஆர்.கே.சதுர்வேதி அனைத்து சி.பி.எஸ்.இ. கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பினார்.
இந்நிலையில் அதுத்த வருடம் முதல் சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு மாணவர்கள் 6 பாடங்களை படிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.