தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நீரிழிவு நோயைத் தூண்டும் என்றும், முட்டை சாப்பிட்டால் நீரிழிவு வரும் என்றும் சீன ஆய்வு முடிவைச் சுட்டிக்காட்டுவது இப்போது பேசுபொருளாகியுள்ளது. இதில் உண்மையில்லை என்று பொதுநல மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.
வாழ்நாள் முழுவதும் பெரும்பாலானோர் அவதிப்படும் குறைபாடாக நீரிழிவு இருக்கிறது. இன்னும் சிலர் நீரிழிவு என்றதும் தன்னால் எந்த சாதனைகளையும் செய்ய முடியாது என்று நினைக்கின்றனர். டைப் ஒன்று நீரிழிவுக்கும், டைப் இரண்டு நீரிழிவுக்கும் வித்தியாசம் தெரியாமல் சிலர் குழப்பம் அடைகின்றனர். மூட நம்பிக்கைகளைக் களையும் விதத்தில் சிவகங்கை, பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா இதுகுறித்த தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
உணவின் முடிவில் இனிப்பு உண்டாலே உணவு உண்ட திருப்தி ஏற்படுகின்றது. பலருக்கு இனிப்பு இல்லாமல் இருக்கவே முடியாது. சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும்.
அரிசியில் உள்ள ஸ்டார்ச் சத்து சர்க்கரை நோய் உள்ளவர்களை மிகவும் பாதிப்பதால் ஸ்டார்ச் குறைவாக உள்ள கோதுமையை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கோதுமை சப்பாத்தியாக, கோதுமை தோசையாக செய்து சாப்பிடலாம்.
சர்க்கரையின் அளவைப் பாதியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.