காஷ்மீர் விவகாரத்தில் தங்களை சீனா ஆதரிப்பதாக பாகிஸ்தான் கூறியதை சீனா மறுத்துள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மீது வெளிநாடுகள் கண்டனம் தெரிவித்தால், அப்போது சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும். ஆயுதம் ஏந்தாத மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதை ஏற்க முடியாது. காஷ்மீர் மாநில மக்களின் விருப்பப்படி தீர்வு காண வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சகத்தின் யு போரென் கூறியதாக பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், இதனை சீனா மறுத்துள்ளது.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்ட வன்முறையில் 3 பாதுகாப்பு படையினர் உட்பட 72 பேர் பலியாகினர். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கடந்த வாரம் முதல் ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்டது. இருப்பினும் ஒருசில பகுதிகளில் வன்முறை நீடிப்பதால் அப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது.
காஷ்மீரில் பயங்கரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து கலவரம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு மேலாகியும் அங்கு அமைதி திரும்பவில்லை. இதன் பின்னணியில் பாகிஸ்தான் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அம்மாநில முதல்வர் முப்தியும், மக்கள் அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொண்டார். இருப்பினும் ஆங்காங்கே கலவரம் நடந்து கொண்டு உள்ளது.
காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து ஜம்மு -காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்ட வன்முறையில் இதுவரை 50- க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.