காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து ஜம்மு -காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்ட வன்முறையில் இதுவரை 50- க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
காஷ்மீரில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுவதால் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து 35-வது நாளாக இன்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இன்று பிற்பகல் டெல்லியில் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.