இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி நேற்று முன்தினம் ஐதராபாத் வந்தடைந்தார். பின்னர் ஐதராபாத் இஸ்லாமிய கல்வியாளர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.
பாங்காக் நீதிமன்றம் முன்னாள் தாய்லாந் வர்த்தக மந்திரிக்கு இன்று 42 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
தாய்லாந், சீனா அரசிற்கும் இடையே செய்யப்பட்ட அரிசி உடன்படிக்கைகளில் ஊழல் நடந்துள்ளதாக கண்டறியப்பட்ட பின்னர் போன்சோங்கிற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து அரசாங்க எதிர்ப்பு ஆணையம் அறிவித்துள்ளதாவது, போன்சோங்ன் ஒப்பந்தங்களால் மாநிலத்திற்கு "பெரும் இழப்புக்களை" ஏற்படுட்டுள்ளன, அத்துடன் அரிசி உள்நாட்டில் மட்டும் விற்கப்பட்டது, ஏற்றுமதி செய்யப்படவில்லை என யிங்லகின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தஸ்சால்ட் ஏவியேசன் நிறுவனம் பிரான்ஸில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திடம் இருந்து 126 ரபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா விரும்பியது. பல்வேறு பிரச்சினைகளால் கடந்த 3 வருடங்களாக இறுதி முடிவு எடுக்கப்படாமல் இருந்து வந்தது.
கடந்த ஆண்டு பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டின் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேயை சந்தித்து இந்தியா நடுத்தரமானதும், பன்முக பயன்பாடு கொண்டதுமான 36 போர் விமானங்களை, பறக்கும் நிலையில் வாங்குவதாக உறுதி அளித்தார்.
ராணுவ பராமறிப்பு பணிகள் மற்றும் மறு விநியோகம் போன்ற பணிகளை மேற்கொள்ள இரு நாட்டின் தரை, வான் மற்றும் கடல் தளங்களை ஒருவருக்கொருவர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவு அதிகரிக்கும் என தெரிகிறது.
இந்த ஒப்பந்த ஏற்பாட்டின்படி, அமெரிக்க ராணுவத்தினர் இந்தியாவில் இருந்து பணியாற்றும் சூழல் தற்போது இல்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஷ் கார்டரும் தெரிவித்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி தனது தான்சானியா பயணத்தை முடித்துக்கொண்டு இன்னொரு ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்கு புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடிக்கு கென்யாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.