பாரதி ஏர்டெல் நிறுவனம் ஒரு புதிய ஆப்பருடன் களத்தில் இறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக ஆன்லைனில் ஸ்மார்ட்போன் விற்பனை செய்ய பாரதி ஏர்டெல் நிறுவனம் துவங்கியுள்ளது.
அந்த வகையில் தற்போது ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஐபோன் 7 விற்பனை ஜோராக நடைபெறுகிறது. அதன்படி ஐபோன் 7 (32 ஜிபி) வாங்குவோர் முன்பணமாக ரூ.7,777 மட்டும் தெலுத்தலாம். மீதித்தொகையை மாதம் ரூ.2,499 என்ற தவணை முறையில் செலுத்தலாம். ஐபோனிற்கு வாடிக்கையாளர்கள் செலுத்தும் தவணையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 30 ஜிபி டேட்டா ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கான ஐஓஎஸ் 11 இயங்குதளம் கிடைக்கத் தொடங்கியுள்ளது.
ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட ஐஓஎஸ் 11 இயங்குதளம் ஐபோன் 5s மற்றும் அதன்பின் வெளியிடப்பட்ட ஐபோன் மாடல்களில் இன்ஸ்டால் செய் முடியும்.
இதேபோல் ஐபேட் ஏர், ஐபேட் ப்ரோ மாடல், ஐபேட் 5-ம் தலைமுறை, ஐபேட் மினி 2 மற்றும் ஐபாட் டச் 6-ம் தலைமுறை மாடல்களில் இன்ஸ்டால் செய்ய முடியும்.
இந்தியாவில் காலை 10.30 மணி முதல் இந்த இயங்குதளம் ஆப்பிள் ஐபோன் வைத்திருப்பவர்களுக்குக் கிடைக்கும் இன்று அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. இதன்படி, பலரும் ஐஓஎஸ் 11க்கு மாறிவிட்டார்கள்.
ஆப்பிள் ஐபோன் நிறுவனம் அதிகப்படியான சலுகைகளை அறவித்து இருந்தது. மேலும் பிளிப்கார்ட் ஆப்பிள் டே விற்பனை என்ற தலைப்பில் பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடி அறிவித்தது அந்நிறுவனம்.
உலக அளவில் பல்வேறு மொபைல் மாடல்கள் தற்போது வந்தாலும் அதை பெரும்பாலும் அதிக அளவு விமர்சிப்பதில்லை. புது ஐபோன் ஒன்று சந்தைக்கு வரும் நிலமையில் பல எதிர்பார்ப்புகள் உன்டாகின்றன மேலும் பல விமர்சனங்கள் அதைப் பற்றி பேசப்படுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.