ஆப்பிள் ஐஓஎஸ் 11 உலகளவில் தொடங்கப்பட்டது!

Last Updated : Sep 20, 2017, 12:11 PM IST
ஆப்பிள் ஐஓஎஸ் 11 உலகளவில் தொடங்கப்பட்டது! title=

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கான ஐஓஎஸ் 11 இயங்குதளம் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட ஐஓஎஸ் 11 இயங்குதளம் ஐபோன் 5s மற்றும் அதன்பின் வெளியிடப்பட்ட ஐபோன் மாடல்களில் இன்ஸ்டால் செய் முடியும். 

இதேபோல் ஐபேட் ஏர், ஐபேட் ப்ரோ மாடல், ஐபேட் 5-ம் தலைமுறை, ஐபேட் மினி 2  மற்றும் ஐபாட் டச் 6-ம் தலைமுறை மாடல்களில் இன்ஸ்டால் செய்ய முடியும். 

இந்தியாவில் காலை 10.30 மணி முதல் இந்த இயங்குதளம் ஆப்பிள் ஐபோன் வைத்திருப்பவர்களுக்குக் கிடைக்கும் இன்று அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. இதன்படி, பலரும் ஐஓஎஸ் 11க்கு மாறிவிட்டார்கள்.

புகிய ஐஓ.எஸ். 11 இயங்குதளம் 64-பிட் செயலிகளை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் 32-பிட் செயலிகள் புதிய இயங்குதளத்தில் வேலை செய்யாது. 32 பிட் செயலிகளை பயன்படுத்த ஆப் டெவலப்பர் மூலம் அவற்றை அப்டேட் செய்ய வேண்டும்.  

ஐஓ.எஸ். 11 அப்டேட் புதிய ஃபைல்ஸ் செயலி, மேம்படுத்தப்பட்ட சிரி, வாய்ஸ் டிரான்ஸ்லேஷன், யுனிஃபைடு கண்ட்ரோல் சென்டர் மற்றும் பல்வேறு முக்கிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஐபேட் சாதனங்களை பொருத்த வரை இந்த அப்டேட் பெரிய அப்டேட்டாக பார்க்கப்படுகிறது. இதில் முன்பைவிட தலைச்சிறந்த மல்டி-டாஸ்கிங் அம்சங்கள் மற்றும் ஆப்பிள் பென்சில் பயன்படுத்த பல்வேறு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இன்னும் அப்டேட் செய்யாதவர்கள், செட்டிங்சில் உள்ள ஜெனரல் என்பதற்குள் இருக்கும் சாப்ட்வேர் அப்டேட் என்பதை க்ளிக் செய்தால் ஐஓஎஸ் 11 அப்டேட் டவுண்லோட் செய்துவிடலாம். டவுண்லோட் செய்யப்பட்டதும் அதை இன்ஸ்டெல் செய்ய வேண்டும். இன்ஸ்டால் செய்த பிறகு மொபைல் ரி-ஸ்டார்ட் செய்யப்படும். மொபைல் ரி-ஸ்டார்ட் ஆனதும் ஆப்பிள் மொபைலில் புதிய ஐஓஎஸ் 11 கிடைத்துவிடும்.

Trending News