ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிறுமிக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிறுமிக்கு மயக்க மருத்து கொடுத்து அறையினுள் அடைத்து வைத்து 3 நாட்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், சிறுமி உயிரிழந்ததும் காட்டுப் பகுதியில் உடலை தூக்கி வீசி எறிந்துள்ளனர்.
இந்த, கொடூர சம்பவம் குறித்து பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 3 போலீஸார் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையடுத்து, கத்துவா சிறுமி பாலியல் கொலை வழக்கு, முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், சிறுமியின் தந்தை வழக்கில் இடைக்கால தடை விதித்திருந்த உச்சநீதிமன்றம். இந்த வழக்கு விசாரணையை பஞ்சாப் நீதிமன்றத்துக்கு மாற்றியுள்ளது....