காற்றின் மேலடுக்கு சுழற்சியில் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
தமிழகத்தில் கத்திரிவெயில் துவங்கிய நிலையில் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். வெயிலுக்கு பயந்து மக்கள் வெளியில் வராமல் மக்கள் வீட்டிற்குள்ளே அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கத்திரி வெயிலுக்கு நடுவே பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் தாக்கம் ஓரளவுக்கு குறைந்துள்ளது.
இதற்கிடையில் அக்னி வெயிலுக்கு நடுவே பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பச் சலனம் காரணமாக உள்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது...!
காற்றின் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!