புதுடெல்லி: தரவு பாதுகாப்பு மசோதா நடைமுறைக்கு வரும் வரை, பயனர்கள் அதன் புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என வாட்ஸ்அப் நிறுவனம் தில்லி உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
புதிய தனியுரிமைக் கொள்கையைத் (Privacy Policy) தேர்வு செய்யாத பயனர்களின் செயல்பாடு கட்டுப்படுத்தப்படாது என்று தலைமை நீதிபதி டி என் படேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் ஆகியோரின் பெஞ்ச் முன் வாட்ஸ்அப் தெளிவுபடுத்தியது.
உடனடி செய்தியிடல் தளமான வாட்ஸ்அப்புக்காக (Whatsapp) ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, "அந்த கொள்கையை நிறுத்தி வைக்க நாங்களே தானாக முன்வந்து ஒப்புக்கொண்டோம். இதை ஏற்றுக்கொள்ளும்படி நாங்கள் மக்களை கட்டாயப்படுத்த மாட்டோம்" என்றார்.
"பயனர்களின் தனியுரிமை எங்கள் உயர்ந்த முன்னுரிமையாக உள்ளது என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். சமீபத்திய புதுப்பிப்புகள் பயனர்களின் தனிப்பட்ட செய்திகளின் தனியுரிமையை மாற்றாது என்பதை நினைவூட்டுகிறோம். பயனர்கள்கள் விரும்பினால், வர்த்தகங்களுடன் பயனர்கள் தொடர்பு கொள்ளும் வழிகளைப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்குவதே இதன் நோக்கமாகும். வரவிருக்கும் வாரங்களில் வாட்ஸ்அப் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான செயல்பாட்டை நாங்கள் கட்டுப்படுத்த மாட்டோம்.
அதற்கு பதிலாக, புதுப்பிப்புகளைப் பற்றியும், பேஸ்புக்கிலிருந்து ஆதரவைப் பெறும் வணிகத்துடன் தொடர்புகொள்வது போன்ற விருப்பங்களை மக்கள் தேர்வுசெய்யும்போது அவற்றின் தகவல்கள் பற்றியும் நாங்கள் அவ்வப்போது பயனர்களுக்கு நினைவூட்டுவோம். இந்த அணுகுமுறை, பயனர்களும் குறிப்பிட்ட வணிகத்துடன் தொடர்பு கொள்ள விரும்புகிறார்களா இல்லையா என்ற தேர்வை வலுப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். குறைந்தபட்சம் வரவிருக்கும் பி.டி.பி சட்டம் நடைமுறைக்கு வரும் வரை நாங்கள் இந்த அணுகுமுறையை பராமரிப்போம்” என்று ஒரு வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
எனினும், வாட்ஸ்அப் தொடர்ந்து அதன் பயனர்களுக்கு புதுப்பிப்புகளை காண்பிக்கும் என்று சால்வே கூறினார்.
ஒற்றை நீதிபதி உத்தரவுக்கு எதிராக பேஸ்புக் (Facebook) மற்றும் அதன் நிறுவனமான வாட்ஸ்அப்பின் மேல்முறையீடுகளை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
வாட்ஸ்அப்-பின் புதிய தனியுரிமைக் கொள்கை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற சிசிஐ-யின் உத்தரவு பிறப்பித்ததை தடை செய்ய நீதிபதி மறுத்ததை அடுத்து ஃபேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும் செய்த முறையீட்டை நீதிபதி விசாரித்து வருகிறது.
ALSO READ: WhatsApp மெஸ்சேஜ் அனுப்புகையில் எழுத்துருக்களை மாற்றுவது எப்படி..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR