New IT rules தனியுரிமைக்கு முடிவு கட்டும் என WhatsApp நீதிமன்றத்தில் வழக்கு

இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் தனியுரிமைக்கு முடிவு கட்டுவதாக இருப்பதாக கூறி வாட்ஸ்-அப் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 26, 2021, 01:10 PM IST
  • வாட்ஸ்அப், இந்திய அரசுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்
  • New IT rules தனியுரிமைக்கு முடிவு கட்டும் என குற்றச்சாட்டு
  • இன்றே புதிய விதிகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை
New IT rules தனியுரிமைக்கு முடிவு கட்டும் என WhatsApp நீதிமன்றத்தில் வழக்கு  title=

இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் தனியுரிமைக்கு முடிவு கட்டுவதாக இருப்பதாக கூறி வாட்ஸ்-அப் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் அமலாக்கத்தை நிறுத்தி வைக்கக் கோரி, பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப், இந்திய அரசுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. 

இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ள  வாட்ஸ்அப், இன்று முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகளை, இன்றே தடை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

Also Read | SOCIAL MEDIA: இன்ஸ்ட்ராகிராம், பேஸ்புக், டிவிட்டர் நாளைக்கு முடக்கப்படுமா? அது சாத்தியமா? 

புதிய விதிகளின்படி, வாட்ஸ்அப் போன்ற "குறிப்பிடத்தக்க சமூக ஊடக இடைத்தரகர்கள்" சேவையில் அனுப்பப்படும் குறிப்பிட்ட செய்திகளின் மூலம் எங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளது என்பதை "கண்டுபிடிக்க (trace)" கண்டறிய வேண்டும்.

வாட்ஸ்அப் Vs இந்திய அரசு வழக்கு மே 25 செவ்வாய்க்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டது.

"உரையாடல்களை' கண்காணிப்பது என்பது, ஒருவரின் தனியுரிமையில் தலையிடுவதாகும் என்று வாட்ஸ்அப் (WhatsApp) கூறுகிறது. புதிய விதிகள் தகவல் பாதுகாப்பை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்றும் வாட்ஸ்அப் குறிப்பிட்டுள்ளது.

End to end encryption விதிகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் புதிய விதிகள் இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்திய அரசுக்கு எதிரான வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Also Read | One rupee Coin value 1 lakh: ஒற்றை ரூபாய் நாணயத்தை கொடுத்து லட்ச ரூபாய் பெறலாம் 

முன்னதாக 3 மாதங்களுக்கு முன்னர், இந்தியாவில் சமூக ஊடக தளங்களுக்கான புதிய மற்றும் கடுமையான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவற்றில் சுமார் 113.5 மில்லியன் பயனர்கள் உள்ளனர்,

OTT இயங்குதளங்களும் 29-30 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளன, டிஜிட்டல் மீடியா  700 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. எனவே, இவற்றை ஒழுங்குமுறை படுத்துவதற்காக அரசு நடவடிக்கை எடுத்தது.

இன்று முதல் சமூக ஊடக தளங்களான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் (WhatsAPP) போன்றவை அரசின் புதிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். ஆனால் வாட்ஸ்அப் நீதிமன்றத்தில் வழக்குக்த் தொடுத்துள்ளது.

ALSO READ | சமூக ஊடகங்கள், டிஜிட்டல் மீடியா, OTT-க்கான புதிய விதிகள்.. முக்கிய தகவல்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News