இந்த புதிய விதிமுறையை ஏற்கவில்லை என்றால், வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும்!

வாட்ஸ்அப் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தும். அதற்குப் பிறகு, ஒரு பயனரால் நிறுவனத்தின் புதிய கொள்கையை ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே வாட்ஸ்அப் சேவையைப் பயன்படுத்த முடியும். 

Last Updated : Dec 5, 2020, 07:08 AM IST
இந்த புதிய விதிமுறையை ஏற்கவில்லை என்றால், வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும்! title=

வாட்ஸ்அப் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தும். அதற்குப் பிறகு, ஒரு பயனரால் நிறுவனத்தின் புதிய கொள்கையை ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே வாட்ஸ்அப் சேவையைப் பயன்படுத்த முடியும். 

தற்போதைய வாழ்க்கை முறையில் WhatsApp ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தகவல்தொடர்பு செயலிகள் இருந்தாலும், வாட்ஸ்அப் (Whatsapp) மிகவும் பிரபலமானது. ஏனென்றால், அதன் பயனர்களுக்கு அனைத்து வகையான வசதிகளையும் வழங்க முயற்சிக்கிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் ஜனவரி ஒன்று முதல் ஒரு புதிய நிபந்தனைகளை கொண்டுவர உள்ளது. அந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் (Terms and Privacy Policy Updates) உங்களது வாட்ஸ்அப் கணக்கு தானாக நீக்கப்படும் எனவும் அறிவிக்கபட்டுள்ளது. இது பிப்ரவரி 8 முதல் நடைமுறைக்கு வரும். 

WABetaInfo, புதிய விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை புதுப்பிப்புகளின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளது. அதில், பயனர்கள் புதிய விதிமுறைகளை ஏற்கலாம் அல்லது அவர்களின் whatsapp கணக்குகளை ‘நீக்கலாம்’ (delete) என்று தெளிவாகக் கூறியுள்ளது. பேஸ்புக்கிற்கு (Facebook) சொந்தமான செயலி அனைத்து பயனர்களும் இந்த புதிய தனியுரிமை விதிகளை ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது இல்லையெனில் அணுகலை இழக்க வேண்டும் என்பதை தனித்தனியாக உறுதிப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் அதன் அறிக்கையில், WABetaInfo விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை புதுப்பிக்கப்படும் என்பதைப் பகிர்ந்து கொண்டது.

ALSO READ | இனி PNR ஸ்டேட்டஸ்யை WhatsApp மூலம் நொடியில் அறிந்து கொள்ளலாம்!

No description available.

முக்கிய புதுப்பிப்புகளில் வாட்ஸ்அப்பின் சேவை மற்றும் பயனர் தரவு எவ்வாறு செயலாக்கப்படுகிறது என்பது பற்றிய கூடுதல் தகவல்கள் இருக்கும் என்று அந்த தகவல் காட்டுகிறது. இத்துடன் பயனர்களின் சாட்களை சேமிக்கவும், நிர்வகிக்கவும், பேஸ்புக் வழங்கும் சேவைகளை வணிகங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றிய தகவலும் இதில் அடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ALSO READ | Tech Tip: WhatsApp-ல் ஆஃப்லைனில் அரட்டை அடிக்கலாம் என உங்களுக்குத் தெரியுமா?

இந்த புதிய அறிவிப்பைத் தொடர்ந்து புதிய நிபந்தனைகள் பிப்ரவரி 8, 2021 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ​​"இந்த தேதிக்குப் பிறகு, நீங்கள் தொடர்ந்து வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதற்கான புதிய விதிமுறைகளை ஏற்க வேண்டும் அல்லது உங்கள் கணக்கை எப்போது வேண்டுமானாலும் டெலீட் செய்துகொள்ளலாம்". 

பயன்பாட்டைத் தொடர்ந்து அணுக விரும்பினால், அடுத்த ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதிக்குள் அனைத்து பயனர்களும் புதிய விதிமுறைகளுக்கு must agree கிளிக் செய்து கட்டாயம் உடன்பட வேண்டும் என்று வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் பத்திரிகைக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News