வாட்ஸ்அப் புதுப்பிப்பு: மெட்டாவுக்குச் சொந்தமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகம் செய்கிறது. தற்போது மீண்டும் வாட்ஸ்அப் அதன் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு சிறந்த அப்டேட்டை வெளியிட உள்ளது. கூகிள் ப்ளே பீட்டா திட்டத்தின் மூலம் பீட்டா சோதனையாளர்களுக்குக் கிடைக்கும் சமீபத்திய பதிப்பு 2.23.14.10 -இல், நிறுவனம் ஒரு சிறந்த அம்சத்தைக் கொண்டுவருகிறது. உயர்தர வீடியோக்களை அனுப்பும் திறனை வழங்கும் அம்சம்தான் இது. அதாவது வீடியோ எந்த தரத்தில் இருக்கிறதோ அதே தரத்தில் வீடியோக்களை இனி பகிரலாம். இந்த அம்சத்தைப் பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
வாட்ஸ்அப்பில் உயர்தர வீடியோக்கள் (High-Quality Videos on WhatsApp)
உயர்தர புகைப்படங்களுக்காக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில், வாட்ஸ்அப் இப்போது இந்த மேம்பாட்டை வீடியோக்களுக்கும் விரிவுபடுத்துகிறது. புதிய அப்டேட் மூலம், பயனர்கள் சிறந்த தரத்தில் வீடியோக்களைப் பகிர அனுமதிக்கும் டிராயிங் எடிட்டருக்குள் ஒரு பொத்தானைப் பெறுவார்கள். வீடியோவின் பரிமாணங்கள் ரிசர்வ் செய்யப்பட்டிருக்கும் போது, லேசான கம்பிரஷன் பயன்படுத்தப்படும். இதன் விளைவாக சிறப்பான ஒட்டுமொத்த தரம் (ஓவர் ஆல் க்வாலிட்டி) கிடைக்கும்.
வீடியோ அனுப்புவதற்கான விருப்பம் கிடைக்கும்
வீடியோவுக்கு, ஹை க்வாலிட்டி ஆப்ஷன் இயல்புநிலை அமைப்பாக, அதாவது டீஃபால்ட் செட்டிங்காக இருக்காது. ஒவ்வொரு முறையும் சிறந்த தரத்தில் வீடியோக்களைப் பகிர விரும்பும் பயனர்கள் அதை கைமுறையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். பயனர்கள் தங்கள் வீடியோ பகிர்வு விருப்பத்தேர்வுகளில் கட்டுப்பாட்டை வைத்திருப்பதை இது உறுதி செய்கிறது.
மேலும் படிக்க | WhatsApp அட்டகாசமான புதிய அம்சம்: இனி இங்கும் ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம்!!
உயர்தர வீடியோக்களை அடையாளம் காண, உயர்தர புகைப்படங்களுக்கான தற்போதைய அம்சத்தைப் போல, வாட்ஸ்அப் தானாகவே செய்தி குமிழியில் ஒரு குறிச்சொல்லைச் சேர்க்கிறது. ஒரு வீடியோ உயர் தரத்தில் அனுப்பப்பட்டிருப்பதை பெறுநர்கள் எளிதாக அடையாளம் காண இது உதவுகிறது.
உயர்தர வீடியோ பகிர்வு அம்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். வரும் வாரங்களில், இந்த அம்சம் படிப்படியாக அதிகமான பயனர்களுக்கு நீட்டிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெரிய வீடியோ அளவைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பயனர்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியுமா என்பதை செக் செய்து பார்க்கலாம். ஏனெனில் சிறிய கோப்புகளுக்கு உயர்தர விருப்பம் கிடைக்காது.
ஸ்டேட்டஸ் அப்டேட்கள் மூலம் வீடியோக்களைப் பகிர தற்போது இந்த அம்சம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், எதிர்காலத்தில் iOS பயனர்களுக்கான வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் உயர்தர வீடியோவிற்கான ஆதரவு சேர்க்கப்படலாம். மேலும் இது தொடர்பான அறிவிப்புகள் இது ரோல் அவுட் செய்யப்படும் போது வெளியிடப்படும்.
வீடியோ மெசேஜ் அம்சம்:
சமீபத்தில், iOS மற்றும் Android இல் உள்ள சில பீட்டா சோதனையாளர்களுக்கு செய்தி அனுப்பும் தளமான வாட்ஸ்அப் ஒரு புதிய வீடியோ செய்தி அம்சத்தை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய அம்சம் பீட்டா பயனர்களுக்கு வீடியோ செய்திகளை பதிவு செய்து அனுப்பும் வசதியை வழங்குகிறது. பெறுநர்கள் ஒரு வீடியோ செய்தியைப் பெறும்போது அது சமீபத்தில் பதிவுசெய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். இது அதன் நம்பகத்தன்மையை பெரிதும் அதிகரிக்கும்.
முதலில் வாட்ஸ்அப்பில் தட்டச்சு, அதாவது டைப் செய்து மெசேஜ் அனுப்பும் வசதிதான் இருந்தது. அதன் பின்னர் வாய்ஸ் மெசேஜுக்கான வசதி அளிக்கப்பட்டது. ஒரு பயனரால் மெசேஜை டைப் செய்ய முடியவில்லை என்றாலோ, அல்லது அதில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலோ, அவர் தான் பகிர விரும்பும் செய்தியை வாய்ஸ் மெசேஜ் மூலம் பேசி ஆடியோ மெசேஜ்களை எளிதாக அனுப்பலாம்.
மேலும் படிக்க | இந்தியாவில் 65 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்துள்ள Whatsapp நிறுவனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ