அமேசான் பிரைம் vs நெட்பிளிக்ஸ்: பெஸ்ட் இது தான்

அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் இரண்டும் ஒடிடி தளங்களாக இருந்தாலும், அவற்றில் பட்ஜெட் ரீதியாக பெஸ்ட் எது? என்பதை தெரிந்து கொள்வோம். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 12, 2022, 08:41 AM IST
  • குறைவான விலையில் நெட்பிளிக்ஸ்
  • 150 ரூபாய்க்கும் குறைவாக பார்க்கலாம்
  • அமேசான் பிரைம் வீடியோவுக்கு சிக்கல்
அமேசான் பிரைம் vs நெட்பிளிக்ஸ்: பெஸ்ட் இது தான் title=

கொரோனாவுக்குப் பிறகு மக்களிடையே தியேட்டர்களுக்கு சென்று படம் பார்க்கும் ஆர்வம் கணிசமான அளவில் குறைந்துவிட்டது. காரணம், ஒடிடியில் ரிலீஸாகும் படங்களை வீட்டில் இருந்தே பார்த்து பழகிவிட்டனர். பெரிய படங்கள் தியேட்டர்க்களில் ரிலீஸான நிலையிலும், ஒடிடி ரிலீஸ் வரை காத்திருந்து பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பவர்கள் நிறைய உள்ளனர். இதனால், ஒடிடி  பிளாட்பார்ம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுவிட்டது.

ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே இருந்த ஒடிடி தளத்தில் இப்போது முன்னணி நிறுவனங்கள் பலவும் ஒடிடியில் களம் கண்டுவிட்டன. குறிப்பாக, அமேசான், நெட்பிளிக்ஸ், ஜீ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் என ஏராளமான ஒடிடி தளங்கள் உள்ளன. அவற்றில் எந்த தளம் சிறப்பாக இருக்கும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. ஒடிடி தளத்தில் அனைத்து தளங்களும் வித்தியாசமான கன்டென்டுகளையே கொடுக்கின்றன. நாம் பட்ஜெட் ரீதியில் வேண்டுமானால் நமக்கு பெஸ்ட் எதுவாக இருக்கும் என தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.

மேலும் படிக்க | குறைந்த பட்ஜெட்டில் அசத்தலான பைக்குகளை வாங்கணுமா? சிறந்த பைக்குகளின் பட்டியல் இதோ

அந்த வகையில் நெட்பிளிக்ஸ் இப்போது அமேசானுக்கு போட்டியாக குறைவான விலையில் ஒடிடி பிளானை அறிமுபகப்படுத்தியிருக்கிறது. 150 ரூபயாக்கு கீழ், அதுவும் அமேசான் பிரைமைவிட குறைவான விலையில் நெட்பிளிக்ஸை நீங்கள் பார்த்து ரசிக்க முடியும். இதுவரை அமேசான் பிரைம் வீடியோவை விட நெட்ஃபிக்ஸ் பார்ப்பது விலை உயர்ந்தது என்று நீங்கள் நினைத்தால், அந்த எண்ணத்தை இப்போது மாற்றிக் கொள்ளுங்கள். 

Netflix ரூ.149 பிளான்

நெட்பிளிக்ஸ் நிறுவனம் 150 ரூபாய்க்கும் குறைவான அதாவது ரூ.149 விலையில் மாதாந்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.  இந்த விலையில், பயனர்கள் 480p வீடியோ தரத்துடன் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களில் ஸ்ட்ரீமிங் செய்யும் வசதியைப் பெற முடியும். இந்த விலையில் மாதம் முழுவதும் அன்லிமிட்டெட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் போன்றவற்றைப் பார்க்கலாம். நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் மிக குறைவான திட்டங்களில் இதுவும் ஒன்று. அதேநேரேத்தில் டேப்லெட் மற்றும் மொபைலில் மட்டுமே நீங்கள் இந்த திட்டத்தில் வீடியோவை பார்க்க முடியும்.

Amazon ரூ.179 பிளான்

அமேசான் நிறுவனம் மிக குறைவான விலையில் அதாவது 179 ரூபாய்க்கு மாதாந்திர திட்டத்தைக் கொடுக்கிறது. இந்த திட்டத்தில் நீங்கள் Amazon அசல் வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களை பார்க்கலாம். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், நீங்கள் மொபைல், டிவி மற்றும் பிற சாதனங்களிலும் ஸ்ட்ரீம் செய்ய முடியும்.

மேலும் படிக்க | இந்த செயலிகள் இனி பிளே ஸ்டோரில் இருக்காது - கூகுள் அதிரடி

அமேசான் vs நெட்பிளிக்ஸ்

இந்த இரண்டு பிளான்களையும் ஒப்பிடும்போது, அமேசான் பிரைம் வீடியோ 30 ரூபாய் அதிகம் உள்ளது. இதனால், அமேசான் பிரைம் வீடியோவைவிட குறைவான விலையில் நெட்பிளிக்ஸை நீங்கள் கண்டுகளிக்கலாம்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News