Netflix மற்றும் Amazon Prime இலவசமாகப் பாருங்கள்! ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டியதில்லை

நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவை எவ்வாறு இலவசமாகப் பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம். இந்த வழிமுறையை நீங்கள் பின்பற்றினால் உங்களுக்கு ஜாக்பாட் தான்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 12, 2023, 08:06 PM IST
  • நெட்பிளிக்ஸ் அமேசான் ஓடிடி
  • இலவசமாக பார்க்க விருப்பமா?
  • இதை மட்டும் செய்தால் போதும்
Netflix மற்றும் Amazon Prime இலவசமாகப் பாருங்கள்! ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டியதில்லை title=

மிகவும் பிரபலமான OTT இயங்குதளங்களைப் பற்றி பேசுகையில், நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ஆகியவை முன்னணியில் இருக்கின்றன. இரண்டு தளங்களும் அவ்வப்போது புதிய திரைப்படங்கள் மற்றும் தொடர்களை வெளியிட்டு வருகின்றன. நீங்கள் OTT-ல் அதிகம் பயன்படுத்துபவர் என்றால்,  நிச்சயம் இந்த இரண்டின் சந்தாவை ரீச்சார்ஜ் செய்து வைத்திருப்பீர்கள். ஆனால், இப்போது, சந்தா சற்று விலை உயர்ந்திருக்கிறது. இது சிலருக்கு கவலையாக இருக்கலாம். அப்படியான நிலையில் நீங்கள் இருந்தால், இரண்டையும் இலவசமாக பார்ப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம்.

Netflix மற்றும் Amazon Prime வீடியோக்களை இலவசமாக பார்ப்பது எப்படி?

சந்தா திட்டம் உள்ளவர்கள் மட்டுமே Netflix மற்றும் Amazon Prime வீடியோவைப் பயன்படுத்த முடியும். ஆனால் நீங்கள் இலவசமாகப் பார்க்க விரும்பினால், உங்களுக்கு ஜியோ அல்லது ஏர்டெல்லின் போஸ்ட்பெய்ட் திட்டம் தேவைப்படும். போஸ்ட்பெய்டு திட்டத்திற்கு பணம் செலுத்துபவர்கள் Netflix மற்றும் Amazon Prime வீடியோவை இலவசமாக அணுக முடியும். இரண்டு திட்டங்களிலும் என்ன வழங்கப்படும் என்பதை அறிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | Oppo vs OnePlus - இந்த 2 ஸ்மார்ட்போன்களில் எது சிறந்தது?

ஜியோ 699 போஸ்ட்பெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.699 போஸ்ட்பெய்ட் திட்டமானது நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜியோசினிமா மற்றும் ஜியோடிவி ஆகியவற்றுக்கான இலவச அணுகலுடன் வருகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, 100 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை தினமும் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் 3 குடும்ப உறுப்பினர்களைச் சேர்க்கலாம். இவை ஒவ்வொன்றும் 5 ஜிபி டேட்டாவைப் பெறும்.

ஏர்டெல் 1,199 ப்ரீபெய்ட் திட்டம்

Netflix இன் அடிப்படை மாதாந்திர திட்டம் ஏர்டெல்லின் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை 6 மாதங்களுக்கு கூடுதல் கட்டணமின்றியும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலை 1 வருடத்திற்கு கூடுதல் கட்டணமின்றியும் பெறுங்கள். Netflix இன் சந்தா திட்டம் 149 ரூபாயில் தொடங்குகிறது. அதே நேரத்தில் அடிப்படை திட்டத்தின் விலை 199 ரூபாயாகும். அமேசான் பிரைமின் மாதாந்திர பேக் ரூ. 299, மூன்று மாத திட்டம் ரூ.599.

மேலும் படிக்க | இவ்வளவு கம்மி விலையில் ஏசியா? விலையை கேட்டால் உடனே வாங்கிடுவீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News