Bajaj CNG பைக்... ₹1200 EMI செலுத்தி வாங்கினால் பெட்ரோல் செலவும் மிச்சம்..!!

Bajaj Freedom 125 CNG Bike: நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ உலகின் முதல் CNG பைக்கான பஜாஜ் ஃப்ரீடம் பைக்கை இந்த மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்தது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 20, 2024, 05:46 PM IST
  • உலகின் முதல் CNG பைக்கான பஜாஜ் ஃப்ரீடம் பைக்கை இந்த மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்தது.
  • தினசரி எரிபொருள் செலவு தோராயமாக 50% குறையும்.
  • பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி விலையில் சுமார் ரூ.25 வித்தியாசம் உள்ளது.
Bajaj CNG பைக்... ₹1200 EMI செலுத்தி வாங்கினால் பெட்ரோல் செலவும் மிச்சம்..!! title=

Bajaj Freedom 125 CNG Bike: நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ உலகின் முதல் CNG பைக்கான பஜாஜ் ஃப்ரீடம் பைக்கை இந்த மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்தது. இந்த பைக்கை ப்யன்படுத்துவதால், தினசரி எரிபொருள் செலவு தோராயமாக 50% குறையும் என நிறுவனம் கூறுகிறது. இதன் மூலம், 5 ஆண்டுகளில் தோராயமாக ரூ.75,000 சேமிக்கலாம் எனக் கூறுகிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்.

பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி விலையில் சுமார் ரூ.25 வித்தியாசம் உள்ள நிலையில், தினமும் 50 கிலோமீட்டர் பயணம் செய்பவர்கள் எரிபொருள் செலவை சிறப்பாக மிச்சப்படுத்தலாம். பெட்ரோல் செலவுடன் ஒப்பிடும் போது ஒவ்வொரு மாதமும் ரூ.1625 சேமிக்கலாம். எனவே அதிக மைலேஜ் தரும் பைக் விரும்புவோருக்கு  பஜாஜ் ஃப்ரீடம் பைக் சிறந்த தேர்வாக இருக்கும். சிஎன்ஜி பைக் 100 கிமீ மைலேஜ் தருவதாக நிறுவனம் கூறுகிறது.

மாதாந்திர EMI ரூ.1200 என்ற அளவில் உங்களால் பணத்தை செலுத்த முடியும் என்றால் இந்த பைக்கை தாராளமாக வாங்கலாம். ரூ.95000 விலை கொண்ட பேஸிக் மாடல் பைக்கை வாங்க அதன் விலையில் 20% அதாவது 19000 ரூபாய் உங்கள் கனவை நனவாக்கலாம்.

பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையில் கடன் வாங்க நீங்கள் எவ்வளவு செலுத்த வேண்டியிருக்கும் என்பதை விரிவாக காணலாம். பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆன்-ரோடு விலையில் கடன்களை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  கடன் வட்டி விகிதம் 8.5% என்று கணக்கிட்டால் நீங்கள் செலுத்த இருக்கும் டவுன் பேமெண்டை பொறுத்து இஎம் ஐ கணக்கிடப்பட்டுள்ளது.

பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக் - EMI கணக்கீடு

எக்ஸ்-ஷோரூம் விலை - ₹95,000
டவுன் பேமெண்ட் 20%  - ₹19,000
கடன் அளவு                     - ₹ 76,000
இஎம்ஐ                               - ₹1204
கடன் காலம்                     - 7 வருடங்கள்

எக்ஸ்-ஷோரூம் விலை - ₹95,000
டவுன் பேமெண்ட் 20%  - ₹19,000
கடன் அளவு                     - ₹ 76,000
இஎம்ஐ                               - ₹1351
கடன் காலம்                    - 6 வருடங்கள்

எக்ஸ்-ஷோரூம் விலை - ₹95,000
டவுன் பேமெண்ட் 20%  - ₹19,000
கடன் அளவு                     - ₹ 76,000
இஎம்ஐ                               - ₹1559
கடன் காலம்                    - 5 வருடங்கள்

மேலும் படிக்க | Bajaj Freedom 125: உலகின் முதல் CNG பைக் அறிமுகம்... எரிபொருள் செலவு 50% குறையும்

ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கில் உள்ள சிறப்பு அம்சங்கள்

1. பஜாஜ் ஃப்ரீடம் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டிலும் இயங்கக்கூடிய 125சிசி சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் உள்ளது. 

2. எஞ்சின் 9.5 பிஎஸ் பவரையும், 9.7 என்எம் டார்க் திறனை கொண்டது. 

3. பைக்கிலன் ஸ்டைலான தோற்றத்தை பாதிக்காத வண்ணம், பைக் இருக்கைக்கு அடியில் சிஎன்ஜி சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 2KG CNG சிலிண்டர் மற்றும் 2 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது.

4. பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருக்கும் வகையில் பைக்கில் எல்இடி ஹெட்லேம்ப் கொண்ட இரட்டை வண்ண கிராபிக்ஸ் உள்ளது. 

5. பஜாஜ் சிஎன்ஜி பைக்கை, தேவைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரண்டிலும் இயக்க ஏதுவாக ஹேண்டில்பாரில் சுவிட்ச் கொடுத்துள்ளது. இந்த பட்டனை அழுத்துவதன் மூலம்   CNG பயன்முறையில் இருந்து பெட்ரோலுக்கும், பெட்ரோலில் இருந்து CNG பயன்முறைக்கும்,  மாற்ற முடியும்.

6. பைக்கில் உள்ள சிஎன்ஜி சிலிண்டரின் எடை 16 கிலோவாக இருக்கும் நிலையில், சிஎன்ஜியை நிரப்பிய பிறகு இதன் எடை 18 கிலோவாக இருக்கும். பஜாஜ் ஃப்ரீடம் பைக்கின் மொத்த எடை 147 கிலோ.

பஜாஜ் ஃப்ரீடம் பைக்கின் மூன்று மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

1. பஜாஜ் ஃப்ரீடம் டிரம் (விலை ரூ 95,000)

2. பஜாஜ் ஃப்ரீடம் டிரம் LED (விலை ரூ 1,05,000)

3. பஜாஜ் ஃப்ரீடம் டிஸ்க் LED (விலை ரூ 1,10,000) . 

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இந்த பைக்கை  7 வண்ணங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முன்பதிவும் துவங்கியுள்ளது. நீங்கள் ஆன்லைனில் அல்லது நிறுவனத்தின் டீலருடன் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.

மேலும் படிக்க | இந்த ஜூலையில் இந்தியாவில் களமிறங்கும் புத்தும் புதிய பைக் மற்றும் கார்கள்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News