வெறும் ரூ. 2,749 -க்கு ஐபோன் வாங்குவது எப்படி? ப்ளிப்கார்ட்டில் இப்படி....

Apple iPhone 11: யாரும் நம்ப முடியாத விலையில் ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் இதை வாங்கலாம். ரூ.36,250 தள்ளுபடிக்குப் பிறகு இந்த ஐபோன் ஃப்ளிப்கார்ட்டில் வெறும் ரூ.2,749 -க்கு கிடைக்கிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 15, 2023, 03:39 PM IST
  • ஆப்பிள் ஐபோன் 11, 2019 இல் ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • மேலும் இது இன்றுவரை அதிக விற்பனையான ஐபோன் மாடல்களில் ஒன்றாக உள்ளது.
  • ஆப்பிள் ஐபோன் 11 2020 ஆம் ஆண்டில் உலக அளவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் ஆகும்.
வெறும் ரூ. 2,749 -க்கு ஐபோன் வாங்குவது எப்படி? ப்ளிப்கார்ட்டில் இப்படி.... title=

ஆப்பிள் ஐபோன் 11 2019 இல் ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது இன்றுவரை அதிக விற்பனையான ஐபோன் மாடல்களில் ஒன்றாக உள்ளது. ஆப்பிள் ஐபோன் 11 2020 ஆம் ஆண்டில் உலக அளவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் ஆகும். ஆப்பிள் ஐபோன் 11 தொடர் வளைந்த விளிம்புகளைக் (கர்வ்ட் எட்ஜெஸ்) கொண்ட கடைசி ஐபோன் சீரிஸாகும். இந்த ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் லிக்விட் ரெடினா எச்டி திரை உட்பட பல அற்புதமான அம்சங்கள் உள்ளன. இதன் விவரக்குறிப்புகள் பயனர்களை கவரும் வகயில் உள்ளன. 

இந்த ஸ்மார்ட்போன் ஹூட்டின் கீழ் A13 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. முன்பக்க 12எம்பி செல்ஃபி கேமரா மற்றும் பின்புறத்தில் இரட்டை 12எம்பி சென்சார்கள் உள்ளன. ஆப்பிள் ஐபோன் 11 இன் விற்பனையானது ஆப்பிள் ஐபோன் எஸ்இ 3 5ஜி விற்பனையை குறைத்தது. இதன் காரணமாக நிறுவனம் கடந்த ஆண்டு அதை தயாரிப்பதை நிறுத்தியது.

இது வரை, ஆப்பிள் ஐபோன் 11 ஒரு பிரீமியம் மலிவு ஸ்மார்ட்போன் ஆக உள்ளது. இது வருடாந்திர ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது அதிக வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தைக் கண்டது. நீங்கள் ஒரு உயர்நிலை ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், உங்களுக்கு ஆப்பிள் ஐபோன் 11 ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். உங்கள் பட்ஜெட் மிக குறைவாக இருந்தாலும் நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் யாரும் நம்ப முடியாத விலையில் ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் இதை வாங்கலாம். ரூ.36,250 தள்ளுபடிக்குப் பிறகு இந்த ஐபோன் ஃப்ளிப்கார்ட்டில் வெறும் ரூ.2,749 -க்கு கிடைக்கிறது. 

பிளிப்கார்ட்டில் எக்கச்சக்க தள்ளுபடி

ஆப்பிள் ஐபோன் 11, ரூ.4,901 விலைக் குறைப்புக்குப் பிறகு பிளிப்கார்ட்டில் ரூ.38,999 -க்கு விற்கப்படுகிறது. கூடுதலாக, வாடிக்கையாளர்கள் HDFC வங்கி கிரெடிட் கார்டு கொண்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளை செய்தால், பிளாட் ரூ.1,250 தள்ளுபடியையும் பெறலாம். இது இந்த ஸ்மார்ட்போனின் விலையை ஒட்டுமொத்தமாக ரூ.37,749 ஆகக் குறைக்கிறது. 

மேலும் படிக்க | Whatsapp அதிரடி!! வாய்ஸ் மெசேஜ விடுங்க.. இனி வீடியோ மெசேஜ் அனுப்பலாம்!!

கூடுதலாக பிளிப்கார்ட்டின் இந்த சேலில் ஒரு பரிமாற்ற சலுகை, அதாவது எக்ஸ்சேஞ் சலுகையும் உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்தால், அதாவது மாற்றிக்கொண்டால், இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் ரூ.35,000 வரை தள்ளுபடி கிடைக்கும். எனினும், இந்த சலுகையை பெற தங்கள் பழைய போன் நல்ல நிலையில் இருப்பதை வாடிக்கையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். 

ஆக மொத்தம், ரூ.36,250 குறைப்புக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஐபோன் 11 ஐ பிளிப்கார்ட்டில் இருந்து வெறும் ரூ.2,749 -க்கு வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. விற்பனை நிறுத்தப்பட்ட போதிலும், ஆப்பிள் ஐபோன் 11 இன்னும் பல ஈ-காமர்ஸ் தளங்களில் வாங்குவதற்கு கிடைக்கிறது. மேலும் ஆப்பிள் அதற்கான ஆதரவை தொடர்ந்து வழங்கும் என்பதையும் வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

கூடுதல் தகவல்:

வரும் வாரங்களில் அறிமுகம் ஆகவுள்ள போன்களின் பட்டியல் இதோ

டிப்ஸ்டர் டெபயன் ராய், வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். Realme 11 Pro, Realme 11 Pro+, Galaxy F54, OnePlus Nord, iQOO Neo 7 Pro, Infinix Note 30 series மற்றும் Oppo Reno 10 தொடர்கள் ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என டிப்ஸ்டரின் கூறியுள்ளார். இருப்பினும், Oppo தொடர் பற்றி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதாவது, இது ஜூலை மாதத்திலும் அறிமுகம் ஆகலாம், அல்லது தாமதமும் ஆகலாம். 

மேலும் படிக்க | இதையும் விடாத அம்பானி... ஜியா சினிமாவின் அடுத்தடுத்த இலவசங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News