2 மாதங்களில் 70 மில்லியன் டிவிட்டர் கணக்குகள் முடக்கம்?

போலி கணக்குகள் மற்றும் வன்முறை தூண்டல்கள் போன்றவைகளில் ஈடுபட்ட 70 மில்லியன் கணக்குகளை 2 மாதங்களில் டிவிட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது.

Last Updated : Jul 8, 2018, 02:26 PM IST
2 மாதங்களில் 70 மில்லியன் டிவிட்டர் கணக்குகள் முடக்கம்? title=

போலி கணக்குகள் மற்றும் வன்முறை தூண்டல்கள் போன்றவைகளில் ஈடுபட்ட 70 மில்லியன் கணக்குகளை 2 மாதங்களில் டிவிட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது.

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றானது டிவிட்டர் தளம் ஆகும். கோடிக்கணக்கான மக்கள் இந்த தளங்த்தை உபயோகப் படுத்தி வருகின்றனர். அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் டிவிட்டரை உபயோகிக்கிறனர்.

தற்போது சமூக வலைத் தளங்களில் வதந்திகள் அதிகம் பரப்பப் படுகின்றன. அதை அடிப்படையாகக் கொண்டு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் டிவிட்டர் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்கள் பாதிக்கப்படுகின்றன.

இந்நிலையில் டிவிட்டர் நிறுவனம் தனது கணக்குகளில் உள்ள போலி பயன்பாட்டாளர்களை கண்டறிந்து நீக்கி வருகிறது. அதன்படி கடந்த மே மற்றும் ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 70 மில்லியன் போலி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News