புதுடெல்லி: TVS தனது புதிய க்ரூஸர் பைக்கை நாளை (2022 ஜூலை 5) அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. அறிமுகமாவதற்கு முன்னரே TVS Ronin 225 என்ற பெயரில் வெளிவரவிருக்கும் இந்த பைக்கின் தோற்றம் கசிந்துள்ளது. இந்த பைக்கை பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்....
டிவிஎஸ்-ரோனின்-225-1
டிவிஎஸ் ரோனின் 225 பைக்கின் படம் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக கசிந்துள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஜூலை 5ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம். கசிந்த படத்தில், இது ஒரு லோ ஸ்லங் க்ரூஸர் மற்றும் ஸ்கிராம்பிளரின் சூப்பர் மாடலாக இருக்கும் என்று தெரிகிறது.
தற்போது, இதன் சிறப்பம்சங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், சில கசிந்த அறிக்கைகளின்படி, இந்த பைக்கில் 225cc இன்ஜின் இருக்கும். அதன் ஆற்றல் வெளியீடு 20 HP (குதிரைத்திறன்) இருக்கும். மேலும், இந்த பைக் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் வரக்கூடியது.
மேலும் படிக்க | ரூ. 19,000-ல் கூட கார் வாங்கலாம், மாருதி சுசுகி அளிக்கும் அசத்தல் ஆஃபர்
TVS Ronin 225 இன் சிறப்பம்சங்கள்
TVS Ronin 225 இன் படம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணப்பட்டது வெளிவந்தது. ஷ்ரேயர் ஸ்ரீதர் என்ற டிப்ஸ்டர் மூலம் கசிந்துள்ளது. கசிந்த படத்தின் படி, நியோ கிளாசிக் பாடி ஸ்டைலை இதில் காணலாம். மேலும், இது ஒரு லோ ஸ்லங் க்ரூஸர் மற்றும் கரடுமுரடான ஸ்கிராம்பிளரின் கிராஸ்ஓவராக இருக்கும்.
எரிபொருள் டேங்க் வடிவமைப்பு மெலிதாக இருந்தாலும் பக்க பேனல்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, பைக்கின் வால் பகுதியும் அழகாக உள்ளது. TVS இன் வரவிருக்கும் இந்த பைக்கில் டூயல் டோன் வண்ணத் திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
கருப்பு நிறம் எஞ்சினுக்கு மேலே உள்ளது. இந்த பைக் முழு எல்இடி ஹெட்லேம்புடன் வரும், இதில் டி வடிவத்துடன் கூடிய பகல்நேர எல்இடி விளக்குகள் கிடைக்கும். இது தவிர, டர்ன் இன்டிகேட்டர்களிலும் எல்இடி விளக்குகள் கிடைக்கும்.
மேலும் படிக்க | இந்திய சாலைகளில் களமிறங்கும் TVS க்ரூசியர் இரு சக்கர வாகனம்
நிறுவனம் டிவிஎஸ் ரோனின் 225 ஐ ஆரம்ப பிரீமியம் பிரிவில் அறிமுகப்படுத்த முடியும். இது கோல்ட் ஃபினிஷ்ட் எவர்டெட் டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்குகளைப் பெறும். நிறுவனத்தின் மற்ற மோட்டார்சைக்கிள்களை விட இந்த பைக்கில் சிறந்த அலாய் வீல்கள் இருக்கும். அதுமட்டுமின்றி இதன் டயர்களும் தடிமனாக இருக்கும்.
இந்த பைக்கில் ஒற்றை வட்ட வடிவத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இருக்கலாம். அதனுடன் மொபைல் இணைப்பு அம்சங்கள் மற்றும் TVS SmartXonnect அமைப்பும் கொடுக்கப்படலாம். இந்த டிவிஎஸ் பைக்கில் டூயல் ஏபிஎஸ் (ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம்) அம்சமும் கிடைக்கும். இந்த பைக் செப்பெலின் க்ரூஸர் கான்செப்ட் மூலம் ஈர்க்கப்பட்டதாக இருக்கும்.
டிவிஎஸ்ஸுக்கு இது முற்றிலும் புதிய பிரிவாக இருக்கும். நிறுவனம் வழக்கமாக 100சிசி முதல் 200சிசி வரையிலான பைக்குகளை வெளியிடுகிறது. டிவிஎஸ் நிறுவனத்திடம் தற்போது 200சிசி முதல் 300சிசி வரையிலான பைக்குகள் இல்லை. TVS Ronin 225 பைக் KTM 250s, Husqvarna 250s மற்றும் Bajaj Pulsar 250s ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இதன் விலை 1.3 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்கும்.
மேலும் படிக்க | ரூ. 6 லட்சத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும் அசத்தலான 7 சீட்டர் கார்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR