ஜூலை மாதம் 5 அட்டகாசமான 5G போன்கள் அறிமுகம்: பட்டியல் இதோ

5G phones launching in India in July 2023: இந்த ஃபோன்கள் பல்வேறு விலை வகைகளில் கிடைக்கும். மேலும் இவை உயர்தர அம்சங்களுடன் சிறந்த விருப்பங்களையும் மக்களுக்கு வழங்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 28, 2023, 10:03 AM IST
  • இந்த வெளியீட்டு அறிவிப்பு வரும் வாரங்களில் வெளியிடப்படும்.
  • இந்த போன்கள் வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ப பயனர்களுக்கு விருப்பங்களை வழங்கும்.
  • மேலும் அவற்றின் சப்ளை சந்தையில் விரைவில் தொடங்கும்.
ஜூலை மாதம் 5 அட்டகாசமான 5G போன்கள் அறிமுகம்: பட்டியல் இதோ  title=

ஜூலை 2023 இல் இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ள 5G போன்கள்: ஜூலை மாதத்தில் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பல 5G போன்கள் அறிமுக வரிசையில் உள்ளன. சாம்சங் கேலக்சி எம்34 (Samsung Galaxy M34), நத்திங் போன் (2) ( Nothing Phone (2)), ஒன்பிளஸ் நார்ட் 3 ( OnePlus Nord 3), ஐக்யூ00 நியோ ப்ரோ (iQoo Neo 7 Pro) மற்றும் ரியல்மீ நார்ஸோ 60 (realme Narzo 60) சீரிஸ் போன்ற பிற பிரபலமான போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த ஃபோன்கள் பல்வேறு விலை வகைகளில் கிடைக்கும். மேலும் இவை உயர்தர அம்சங்களுடன் சிறந்த விருப்பங்களையும் மக்களுக்கு வழங்கும். 
இந்த வெளியீட்டு அறிவிப்பு வரும் வாரங்களில் வெளியிடப்படும். இந்த போன்கள் வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ப பயனர்களுக்கு விருப்பங்களை வழங்கும். மேலும் அவற்றின் சப்ளை சந்தையில் விரைவில் தொடங்கும். இந்த போன்களில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கப்போகின்றன என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Samsung Galaxy M34

கேலக்ஸி எம் சீரிஸ் போன்களுக்கான சில முக்கிய அம்சங்களை சாம்சங் உறுதி செய்துள்ளது. இந்த ஃபோனில் 120Hz டிஸ்ப்ளே, 6,000mAh பேட்டரி மற்றும் 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கும். மற்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை. இருப்பினும், Samsung Galaxy M34 5G ஃபோன் 6.6-இன்ச் FHD+ Super AMOLED திரையைக் கொண்டிருக்கும் என்றும் மீடியாடெக் டைமென்சிட்டி 1080 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் ஒரு கசிவு தெரிவிக்கிறது. நிறுவனம் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nothing Phone (2) 

நத்திங் ஃபோன் (2) ஒரு அசத்தலான புதிய 5G ஃபோன் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது Qualcomm இன் டாப்-எண்ட் ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படும். 6.7 இன்ச் திரை, 4,700mAh பேட்டரி மற்றும் புதிய ஒளி/ஒலி அமைப்புடன் சற்று வித்தியாசமான வடிவமைப்புடன் இந்த போன் வரும். இந்த மொபைலில் (2) சார்ஜர் சேர்க்கப்படாது, ஏனெனில் இது முதல் தலைமுறை தயாரிப்புகளில் இல்லை. பின்புற மற்றும் முன் கேமரா சென்சார்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. நத்திங் ஃபோனில் (2) போனில் மூன்று வருட ஆண்ட்ராய்டு OS மேம்படுத்தல்கள் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு இணைப்புகளுக்கான ஆதரவையும் நிறுவனம் அறிவிக்கிறது. எனவே, இந்த போன் பயனர்களுக்கு நீண்ட காலத்திற்கு சேவைகளை வழங்கும் வல்லமையை கொண்டிருக்கும்.

OnePlus Nord 3

OnePlus Nord 3 ஆனது 1.5K தெளிவுத்திறன் மற்றும் 120Hz டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம். இது சுமார் 6.74 இன்ச் அளவில் இருக்கும். இது எப்போதும் OnePlus Nord தொடர் போன்களுடன் வருவதால், இது பெரும்பாலும் AMOLED பேனலைக் கொண்டிருக்கும். சமீபத்திய OnePlus பேட் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. OnePlus Nord 3 ஸ்மார்ட்போன்  MediaTek Dimensity 9000 SoC மூலம் இயக்கப்படலாம், இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus பேடில் நிறுவனத்தால் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் OnePlus Nord 3 இன் விலை ரூ.30,000 -க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | Flipkart-ல் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்: பழைய போன், டிவி, ஃப்ரிட்ஜ் விற்று சம்பாதியுங்கள்

Realme narzo 60 தொடர்

டிப்ஸ்டரான முகுல் ஷர்மாவின் கூற்றுப்படி, ரியல்மி வரவிருக்கும் நர்சோ போனை 1TB சேமிப்பகத்துடன் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. Realme சமீபத்தில் ஒரு டீசரில் இதை சுட்டிக்காட்டியதால் இந்த விஷயம் உண்மையானது என்றே தோன்றுகிறது. இந்த 5ஜி போனில் பயனர்கள் 2,50,000 -க்கும் மேற்பட்ட புகைப்படங்களை சேமிக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. மீதமுள்ள விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

iQOO Neo 7 Pro

iQOO Neo 7 Pro ஸ்மார்ட்போன் 6.78-inch FHD+ Samsung E5 AMOLED டிஸ்ப்ளேவுடன் அறிமுகமாகும். பேனல் 120Hz புதுப்பிப்பு விகிதத்தில் (ரெஃப்ரெஷ் ரேட்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மொபைலில் Qualcomm Snapdragon 8+ Gen 1 சிப்செட் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இது ஒரு முதன்மை சிப்செட் மற்றும் 2022 இன் பல ஃபிளாக்ஷிப் போன்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த சிப்செட் மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் இதைப் பயன்படுத்தினால் போனின் சார்ஜ் அதிகமாகும். மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வரவிருக்கும் நத்திங் ஃபோன் 2 லும் அதே சிப்செட் பயன்படுத்தப்படும். மேலும் இது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் இருக்கலாம். iQOO Neo 7 Pro இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் போது, ​​அதன் விலை 40,000 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | சாம்சங்கின் சூப்பர் டூப்பர் 5ஜி ஸ்மார்ட்போன்! வியக்கவைக்கும் அம்சங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News