கார் வாங்கப்போறீங்களா? இந்தியாவின் டாப் 10 பாதுகாப்பான கார்கள் இவைதான்

Safest Cars in India: நம் நாட்டில் விற்கப்படும் கார்களில் மிகவும் பாதுகாப்பான கார்கள் எவை என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் மக்களிடையே உள்ளது.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 28, 2023, 10:57 AM IST
  • காரை வாங்கும் போது, ​​கார் எவ்வளவு பாதுகாப்பானது மற்றும் அதன் பாதுகாப்பு மதிப்பீடு என்ன என்பதை மக்கள் கருத்தில் கொள்கிறார்கள்.
  • அப்படிப்பட்ட நிலையில், நம் நாட்டில் விற்கப்படும் கார்களில் மிகவும் பாதுகாப்பான கார்கள் எவை என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வமும் மக்களிடையே இருக்கும்.
  • இந்தியாவின் டாப் 10 பாதுகாப்பான கார்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கார் வாங்கப்போறீங்களா? இந்தியாவின் டாப் 10 பாதுகாப்பான கார்கள் இவைதான் title=

இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: கார் வாங்கும் கனவு அனைவருக்கும் உள்ள ஒரு கனவாகும். தினமும் அலுவலகம் செல்ல, குடும்பம், உறவினர்களுடன் வெளியே செல்ல என நாம் பயன்படுத்தும் கார் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதில் நாம் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் கார் வாங்கும்போது விலைக்கு ஈடாக பாதுகாப்பு அம்சத்துக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். கார்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவதால், மக்கள் கார்களின் பாதுகாப்பு மதிப்பீட்டையும் சரிபார்க்கிறார்கள். 

இந்த காலத்தில், ஒரு காரை வாங்கும் போது, ​​கார் எவ்வளவு பாதுகாப்பானது மற்றும் அதன் பாதுகாப்பு மதிப்பீடு என்ன என்பதை மக்கள் கருத்தில் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில், நம் நாட்டில் விற்கப்படும் கார்களில் மிகவும் பாதுகாப்பான கார்கள் எவை என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வமும் மக்களிடையே இருக்கும். இந்தியாவின் டாப் 10 பாதுகாப்பான கார்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1. Volkswagen Virtus: 
சோதனை நிறுவனமான குளோபல் என்சிஏபி, கிராஷ் டெஸ்டில் வோக்ஸ்வாகன் விர்டஸுக்கு 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை வழங்கியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.11.47 லட்சம் ஆகும் (எக்ஸ்-ஷோரூம்).

2. Skoda Slavia: 
குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்டில் ஸ்கோடா ஸ்லேவியாவுக்கு 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை வழங்கியுள்ளது. விர்டஸைப் போலவே இது ஒரு பிரீமியம் மிட் சைஸ் செடான் ஆகும். இதன் ஆரம்ப விலை ரூ.11.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

3. Volkswagen Taigun: 
இது ஒரு சிறிய எஸ்யூவி. குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்டில் வோக்ஸ்வேகன் டைகுன்னுக்கு 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை வழங்கியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.11.61 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

மேலும் படிக்க | Used Cars: 4 லட்சம் ரூபாயில் கிடைக்கும் சூப்பர் சிஎன்ஜி கார்கள்

4. Skoda Kushaq:
டைகுனைப் போலவே, ஸ்கோடா குஷாக்கும் ஒரு சிறிய எஸ்யூவி. குளோபல் என்சிஏபி நடத்திய கிராஷ் டெஸ்டில் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டையும் இது பெற்றுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.11.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

5. Mahindra Scorpio-N: 
இது மஹிந்திராவின் சக்திவாய்ந்த மற்றும் பிரபலமான SUV ஆகும். இது கடந்த ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டது. குளோபல் NCAP ஆனது விபத்து சோதனையில் மகிந்தியா ஸகார்பியோ என் -க்கு 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை வழங்கியுள்ளது. இதன் விலை ரூ 12.74 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம்).

டாப் பாதுகாப்பு கார்களின் வரிசையில் அடுத்து வரும் 5 கார்கள்

இவை தவிர, டாப்-10 பாதுகாப்பான கார்களில் மஹிந்திரா XUV300 மற்றும் மஹிந்திரா XUV700 ஆகியவையும் அடங்கும். இரண்டுமே Global NCAP இலிருந்து 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளன. டாடா நிறுவனத்தின் மூன்று கார்கள் - Tata Punch, Tata Altroz ​​மற்றும் Tata Nexon ஆகியவை Global NCAP இலிருந்து 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளன. இவற்றில், டாடா பன்ச் கார்தான் மலிவானது. இதன் விலை ரூ.6 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

மேலும் படிக்க | Royal Enfield: அதிரடி விற்பனை செய்து சாதனை, அதிகமாக வாங்கும் கஸ்டமர்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News