Power Bank Tips: பவர் பேங்க் தேர்வு செய்வதில் குழப்பமா? இதோ உங்களுக்கான டிப்ஸ்

எந்த பவர் பேங்க் தேர்வு செய்யலாம் என்ற குழப்பம் இருந்தால், இந்த தகவல் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 18, 2022, 03:58 PM IST
  • பவர் பேங்குகளை தேர்வு செய்ய டிப்ஸ்
  • தரமான லித்தியம் பேட்டரியை தேர்வு செய்யவும்
  • அதிக பேட்டரி திறனைக் தேர்வு செய்யுங்கள்
Power Bank Tips: பவர் பேங்க் தேர்வு செய்வதில் குழப்பமா? இதோ உங்களுக்கான டிப்ஸ் title=

Power Bank Tips: ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் உள்ளிட்ட பிற கேஜெட்களின் அம்சங்கள் நாளுக்கு நாள் அப்டேட்டாகிக் கொண்டிருந்தாலும், பேட்டரி லைப் இன்றும் பெரிய பிரச்சனையாகவே உள்ளது. ஸ்மார்ட்போன்களின் இந்த பேட்டரி பிரச்சனையை தீர்க்க களமிறக்கப்பட்ட பவர் பேங்க், மக்களிடையே அதீத வரவேற்பை பெற்றிருக்கிறது. பேட்டரி லைப் குறைவாக இருக்கும்போது பேக்கப்புக்காக பயன்படுத்துவதற்கு உதவுவதால், இதைத் தேடி தேடி வங்க ஆரம்பித்துள்ளனர். ஆன்லைன் விற்பனை தளங்களில் ஸ்மார்ட்போன்களுக்கு இருக்கும் ஆஃபர் போலவே, பவர்பேங்குகளுக்கும் கூடுதல் ஆஃபர்கள் கொடுக்கப்படுகின்றன. 

பவர் பேங்குகளின் மூவீங் அதிகமாக இருப்பதை உணர்ந்த முன்னணி எலக்டிரானிக் பிராண்டுகள், புதுப்புது பெயர்களில் பவர் பேங்குகளை மார்கெட்டில் களமிறக்கியுள்ளன. இதனால், எண்ணற்ற பவர்பேங்குகளை பார்க்கும் மக்களுக்கு, குழப்பம் ஏற்படுகிறது. எது சிறந்தது? எந்த பவர்பேங்க் லைப் கொடுக்கும் என்ற சந்தேகங்கள் இருக்கின்றன. இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு சில டிப்ஸூகள் நீங்கள் சிறந்த பவர் பேங்கை தேர்வு செய்ய உதவலாம். 

மேலும் படிக்க | ஸ்டைலான வடிவமைப்புடன் Oppo Reno 8 சீரிஸ் இன்று இந்தியாவில் அறிமுகம்

பேட்டரி தேர்வு 

பவர் பேங்க் வாங்கும் போது, ​​அதன் பேட்டரி திறனை சரிபார்க்கவும். பவர்பேங்கில் mAh முன் இருக்கும் எண்கள், சாதனத்தின் சார்ஜிங் திறனை குறிப்பதாகும். நீங்கள் ஒரு பவர் பேங்கை வாங்குகிறீர்கள் என்றால், ​​அதன் வெளியீட்டு மின்னழுத்தம் உங்கள் சாதனத்துடன் பொருந்துகிறதா? என்பதைச் சரிபார்க்கவும். பேட்டரி வெளியீடு மின்னழுத்தம் சார்ஜ் செய்யப்படும் கேஜெட்டை விட குறைவாக இருந்தால், அது உகந்ததாக இருக்காது. உதாரணமாக உங்கள் கேட்ஜெட்டின் பேட்டரி திறன் 1,500 mAh எனில், நீங்கள் 3,000 mAh திறன் கொண்ட பவர் பேங்கை வாங்க வேண்டும். 

எல்இடி லைட்

பவர் பேங்கில் எல்இடி இண்டிகேட்டர் இருப்பது மிகவும் முக்கியம். இதன் மூலம் பேட்டரி நிலை மற்றும் சார்ஜிங் நிலை பற்றி தெரிந்து கொள்ளலாம். எனவே தெளிவான LED இண்டிகேட்டர் லைட் உள்ள பவர் பேங்க் வாங்கவும்.

லித்தியம்-பாலிமர் பேட்டரி

கேஜெட்டுகள் என்று வரும்போது, ​​பாதுகாப்பை கவனிக்காமல் விடக்கூடாது. பலர் இரவில் தூங்கும் போது ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வதால் பிரச்சனைகள் ஏற்படும். மோசமான லித்தியம்-பாலிமர் பேட்டரிகள் ஆபத்தானவை. ஏனெனில் இந்த பவர் பேங்குகள் அதிக சார்ஜ் செய்வதால் வெடிக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. 

மேலும் படிக்க | செகணட் கார் வாங்கும் முன் கவனத்தில் வைக்க வேண்டிய 6 விஷயங்கள்

கேபிள் தரம்

சார்ஜிங் நேரம் கேபிளின் தரத்தால் தீர்மானிக்கப்படுகிறது. உயர்தர கேபிள் கேட்ஜெட்டை அதிக வெப்பமடையாமல் பாதுகாக்கிறது. உங்கள் பவர் பேங்குடன் வரும் கேபிள் தரமானதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பவர் பேங்குடன் வரும் கேபிளை கேஜெட்களை சார்ஜ் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News