டெக்னோ ஸ்பார்க் 8பி என பெயரிடப்பட்ட குறைந்த விலை ஸ்மார்ட்போனை டெக்னோ அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்பார்க் 8பி-இன் சிறப்பம்சங்கள் 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா, 7 ஜிபி ரெம், 6.6-இஞ்ச் FHD+ டிஸ்ப்ளே மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் ஆகியவையாகும். இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே டெக்னோ ஸ்பார்க் 8 சி, ஸ்பார்க் கோ 2022 மற்றும் ஸ்பார்க் 8 ப்ரோ ஆகியவற்றை உள்ளடக்கிய நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் தொடரில் கூடுதல் இணைப்பக வந்துள்ளது. டெக்னோ ஸ்பார்க் 8பி-இன் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் 8பி-ன் விலை
டெக்னோ ஸ்பார்க் 8பி ஆனது 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கும் ஒரே ஸ்டோரேஜ் வேரியண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.10,999 ஆகும். வண்ணங்களைப் பொறுத்தவரை, இது அட்லாண்டிக் ப்ளூ, ஐரிஸ் பர்பில், டஹிடி கோல்ட் மற்றும் டர்க்கைஸ் சியான் வண்ண வகைகளில் கிடைக்கும். இது இப்போது ஆஃப்லைன் சில்லறை கடைகளில் வாங்குவதற்கு கிடைக்கிறது.
மேலும் படிக்க | Flipkart offer: ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனையாகும் Realme 5ஜி ஸ்மார்ட்போன்
டெக்னோ ஸ்பார்க் 8பி விவரக்குறிப்புகள்
டெக்னோ ஸ்பார்க் 8பி ஆனது 1,080×2,408 பிக்சல்கள் தெளிவுத்திறனை வழங்கும் 6.6-இன்ச் முழு-எஸ்டி+ வாட்டர் டிராப் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது மீடியாடெக் ஹீலியோ கி85 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 4ஜிபி ரேம் வழங்குகிறது.
இது மெமரி ஃப்யூஷன் அம்சம் மற்றும் 64ஜிபி உள் சேமிப்புடன் 7ஜிபி வரை விரிவாக்கக்கூடியது. இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு பயன்பாடுகளை அறிமுகப்படுத்த எடுக்கும் சராசரி நேரத்தை 43 சதவீதம் வரை மேம்படுத்துகிறது என்று நிறுவனம் கூறுகிறது.
டெக்னோ ஸ்பார்க் 8P கேமரா
கேமரா பிரிவில், இந்த மொபைல் போனில் 50எம்பி ப்ரைமரி சென்சார், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் ஏஐ லென்ஸுடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கும். இது 2கெ டைம்-லாப்ஸ், ஸ்லோ மோஷன் மற்றும் வீடியோ பொக்கே போன்ற அம்சங்களுடன் வருகிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, டெக்னோ ஸ்பார்க் 8பி ஆனது 8எம்பி ஃப்ரண்ட் ஃபேசிங் கேமராவுடன் வருகிறது.
டெக்னோ ஸ்பார்க் 8P பேட்டரி
பேட்டரியைப் பொறுத்தவரை, ஸ்மார்ட்போனில் 18W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000 mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். இந்த கைபேசியானது ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IPX2 மதிப்பீட்டுடன் வருகிறது. இது டிடிஎஸ் சரவுண்ட் சவுண்டுடன் ஸ்பீக்கர்களை பேக் செய்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR