Tata Sky Cashback Offer: உங்களிடம் டாடா ஸ்கை இணைப்பு இருந்து, ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்தும், கேஷ்பேக் கிடைக்கவில்லை என்றால், உங்களுக்கான ஒரு சிறந்த சலுகையைப் பெற இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் உங்களுக்கு கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த சலுகையைப் பற்றி காணலாம்.
இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு கேஷ்பேக் (Cashback Offer) கிடைக்கும். நிறுவனம் தனது இணையதளத்தில் இந்த சலுகையை பட்டியலிட்டுள்ளது. இந்த சலுகையின் கீழ், பயனருக்கு இரண்டு மாதங்களுக்கான கேஷ்பேக் வழங்கப்படும். நீங்கள் டாடா ஸ்கை பயனராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது. இந்த சலுகையை பற்றி தெரிந்து கொள்வோம்.
டாடா ஸ்கை கேஷ்பேக் சலுகைகள்
Tata Sky இன் செயலி அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து ரீசார்ஜ் செய்தால், வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக்கின் பலன் கிடைக்கும். 12 மாதங்களுக்கு ஒன்றாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே கேஷ்பேக் கிடைக்கும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் (Recharge Plan) செய்தால், இந்த கேஷ்பேக்கிற்கு நீங்கள் தகுதி பெற மாட்டீர்கள்.
ALSO READ | வெறும் ஆயிரம் ரூபாய்க்கு 32 இன்ச் Smart TV வாங்க அறிய வாய்ப்பு
எப்போது கேஷ்பேக் கிடைக்கும்?
7 வேலை நாட்களுக்குள் நீங்கள் கேஷ்பேக்கைப் பெற்று விடுவீர்கள். முதல் மாதத்திற்கான கேஷ்பேக் 48 மணிநேரத்தில் கிடைக்கும், இரண்டாவது மாதத்திற்கான கேஷ்பேக் 7 வேலை நாட்களில் கிடைக்கும்.
சலுகை எவ்வளவு காலம்?
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, இந்த சலுகை ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரை கிடைக்கும். இந்த கால அளவிற்குள் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கான கேஷ்பேக் கிடைக்கும். இந்தச் சலுகையை ஒருமுறை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது
ஏற்கனவே வருடம் முழுவதுக்கும் ரீசார்ஜ் செய்தவர்களுக்கு இந்த பலன் கிடைக்காது. நிறுவனத்தின் மொபைல் செயலி அல்லது Tata Sky தளம் மூலம் Deutsche Bank டெபிட் கார்டைப் (Debit Card) பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யும்போது மட்டும்தான் கேஷ்பேக் கிடைக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ALSO READ | iPhone 12 Mini பம்பர் தள்ளுபடி, மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR