ரூ. 33000 க்கு அசத்தலான சாம்சங் 5 G ஸ்மார்ட் போன் !

அசத்தலாக களமிறங்கப்போகும் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M 52 5G  ஸ்மார்ட்போன்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 20, 2021, 01:04 PM IST
ரூ. 33000 க்கு அசத்தலான சாம்சங் 5 G ஸ்மார்ட் போன் ! title=

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M 52 5G  ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 19-ம் தேதி அறிமுகமாகும் என அமேசான் தளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் குறிப்பிட்ட தேதியில் அறிமுகமாகவில்லை. புதிய இ-காமர்ஸ் பட்டியலில் இதன் காப்பு பிரதி எடுக்கப்பட்டது. இதில் அதன் விலை மற்றும் அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டது. ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் தளத்தின் பட்டியலில் சாம்சங் கேலக்ஸி M 52 5G சாதனத்தின் முழு அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

M52

தற்போது இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 28-ம் தேதி அறிமுகமாகும் என அமேசான் தளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய கேலக்ஸி M 52 5G  மாடல் 7.2 mm . அளவில் உருவாகி இருக்கிறது. இந்த மாடல் குறைந்த எடையில், அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கும் என அமேசான் டீசரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.  சாம்சங் கேலக்ஸி M 52 5G  போலந்தில் உள்ள ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் வலைதளத்தில் காணப்பட்டது. அதேபோல் பட்டியலின் மேல் இடதுபுறத்தில் செங்குத்து வடிவத்தில் கேமரா அமைப்பு இருக்கிறது. மேலும் முன்பக்கமாக மையமாக அமைக்கப்பட்ட பஞ்ச் ஹோல் பேனல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கேலக்ஸி M 52 5 G சாதனத்தின் விலை இந்திய மதிப்புப்படி ரூ.1,749 ஆக இருக்கிறது. இந்தியாவில் இந்த சாதனத்தின் விலை ரூ.35,000-க்கு கீழ் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த விலைப்பிரிவில் சாதனம் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.  வரவிருக்கும் பல புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்களில் கேலக்ஸி எம்52 5ஜி சாதனமும் ஒன்று. இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 778ஜி செயலி மூலம் இயக்கப்படும் சாம்சங் சாதனமாகும்.

samsung

இந்த ஸ்மார்ட்போனில் 4500 M A H  பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 11 OS  மூலம் இயக்கப்படுகிறது. மேலும் அனைத்தும் ப்ரீமியம் ரக அம்சங்களை கொண்டிருக்கிறது. கேலக்ஸி M 52 5G சாதனமானது ஒன்பிளஸ் நோர்ட் 2 மற்றும் போக்கோ F  3 GT  சாதனங்களுக்கு சிறந்த போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.  இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி M 52 5G  மாடலில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, பக்கவாட்டில் கைரேகை சென்சார், மூன்று கேமரா சென்சார்கள், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ 3.1 O S ., USB டைப் C  போர்ட் வழங்கப்படும் என தெரிகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News