இலங்கையின் கண்டி மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் பிரச்சணையை கட்டுப்படுத்த, இலங்கை அரசு உள்நாட்டில் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது!
இலங்கையில், சிறுபான்மையினர் அதிகமாக இருக்கும் கண்டி திகன மற்றும் தெல்தெனிய பகுதியில் வன்முறை நிகழ்வுகள் தொடர்ந்ததை அடுத்து அங்கு ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து சமூக வலைதளங்கள் மூலம் கலவரக்காரர்கள் தகவல்களை பரிமாறிக்கொள்ள சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல் இருக்க நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக நேற்றைய தினம் நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி திஷ்ஷ நாயக்க தெரிவித்தார். இதனையடுத்து நாட்டில் வாழும் இஸ்லாமிய மக்கள் தங்கள் பாதுகாப்புகளை கோரி வீதிகளில் ஒன்றுக்கூடி குரல் எழுப்பினர்.
Sri Lanka orders blocking of social media sites, including Facebook, to stop spread of violence, reports AP. #SriLanka
— ANI (@ANI) March 7, 2018
இந்த நிகழ்வை அடுத்து தற்போது இலங்கையில் சமூகவலைதளலங்களை பயண்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.