ரஷ்யாவின் மனித வடிவிலான ரோபோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றது!

ரஷ்யாவின் மனித வடிவிலான ரோபோ விண்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு மையத்தை சென்றடைந்துள்ளதாக நாசா அறிவிப்பு!!

Last Updated : Aug 27, 2019, 10:39 AM IST
ரஷ்யாவின் மனித வடிவிலான ரோபோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றது! title=

ரஷ்யாவின் மனித வடிவிலான ரோபோ விண்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு மையத்தை சென்றடைந்துள்ளதாக நாசா அறிவிப்பு!!

விண்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு மையத்தில் உள்ள வீரர்களுக்கு அவசர காலங்களில் உதவுவதற்காக ரஷ்யா மனித வடிவிலான ஒரு ரோபோவை உருவாக்கியது. ஃபெடார் என்ற இந்த மனித ரோபோ 1.8 மீ உயரமும், 160 கிலோ எடையும் கொண்டது. இது மின் இணைப்புகளை சரிசெய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். 

இந்த ரோபோ நாசா உதவியுடன் விண்வெளி ஆய்வு ஆய்வு மையத்திற்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இந்த ரோபோவுடன் ரஷ்யாவின் சோயுஸ் எம்.எஸ்.14 என்ற ஆளில்லா விண்கலமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எப்போதும் மனிதர்களுடன் பயணிக்கும் சோயுஸ் புதிய அவசர அமைப்பை பரிசோதிப்பதற்காக இம்முறை தனியாக அனுப்பப்பட்டுள்ளது. 

2011 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா அனுப்பிய ரோபோனாட்-2 என்ற மனித ரோபோ தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டது. 2013 ஆம் ஆண்டு ஜப்பான் அனுப்பிய கிரோபோ என்ற சிறிய ரோபோ மட்டுமே விண்வெளி ஆய்வுமையத்தில் உள்ள நிலையில், தற்போது ரஷ்யா புதிய மனித ரோபோ ஒன்றை அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News