Simple One: அட்டகாச வரம்பு கொண்ட இந்த மின்சார ஸ்கூட்டரில் ரூ.60,000 வரை மானியம் கிடைக்கும்

சிம்பிள் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் சிம்பிள் ஒன் மின்சார பைக்கை அறிமுகம் செய்துள்ளது, ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் S1 மற்றும் S1 ப்ரோ மற்றும் ஏத்தர் 450x போன்ற மற்ற மின்சார பைக்குகளுக்கு இது சரியான போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2021, 05:05 PM IST
  • சிம்பிள் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் சிம்பிள் ஒன் மின்சார பைக்கை அறிமுகம் செய்துள்ளது.
  • சிம்பிள் ஒன் பைக்கின் விநியோகங்கள் ஜனவரி 1, 2022 க்குள் தொடங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
  • சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் பைக் 236 கிமீ என்ற வரம்பை அளிக்கிறது.
Simple One: அட்டகாச வரம்பு கொண்ட இந்த மின்சார ஸ்கூட்டரில் ரூ.60,000 வரை மானியம் கிடைக்கும் title=

புதுடெல்லி: சிம்பிள் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் சிம்பிள் ஒன் மின்சார பைக்கை அறிமுகம் செய்துள்ளது, ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் S1 மற்றும் S1 ப்ரோ மற்றும் ஏத்தர் 450x போன்ற மற்ற மின்சார பைக்குகளுக்கு இது சரியான போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

நிறுவனம் தற்போது சிம்பிள் ஒன் மின்சார பைக்கிற்கு (Simple One Electric Scooter) ப்ரீ-ஆர்டர்களை மட்டுமே ஏற்கிறது. ஓலா மின்சார ஸ்குட்டருக்கு போட்டியாக இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்ட சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் ரூ .1,947 செலுத்தி முன்பதிவு செய்யலாம். 

சிம்பிள் ஒன் மின்சார பைக் ரூ .1,09,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது (எக்ஸ்-ஷோரூம் விலை). இருப்பினும், சிம்பிள் ஒன் பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ .60,000 வரையிலான ஃபேம் 2 (Fame 2) மானியத்தை பெறுவதற்கான தகுதி கிடைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. மாநில மானியங்கள் இருந்தால் அவையும் கிடைக்கும்.  

நிறுவனம் பைக்குகளை டெலிவரி செய்யத் தொடங்கும் போது, ​​உங்கள் ஆர்டர் உருவாக்கப்படும். அதன் பிறகு, உங்கள் நகரத்தில் உள்ள ஆர்டர் வரிசையைப் பொறுத்து, பைக்கை பெறும் செயல்முறையை நிறைவு செய்ய, உங்களுக்கு செய்தி அனுப்பப்படும். 

ALSO READ: Ola Electric Scooter vs Simple One: எந்த ஸ்கூட்டர் சிறந்தது? முழு ஒப்பீடு இதோ!!

சிம்பிள் ஒன் பைக்கின் விநியோகங்கள் ஜனவரி 1, 2022 க்குள் தொடங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. சிம்பிள் ஒன் பைக் நான்கு ஸ்டாண்டர்ட் வணங்களுடன் அறிமுகம் ஆகியுள்ளது. பிரேசன் பிளாக், அசூர் ப்ளூ, கிரேஸ் ஒயிட் ஆகிய வண்ணங்களுடன் ஒவ்வொரு மெட்ரோ நகரத்திலும் கூடுதலாக அந்த நகரத்தின் தேவையைப் பொறுத்து ஒரு வண்ணம் வழங்கப்படும். உதாரணமாக, பெங்களூருவில் நம்ம ரெட் என்ற வண்ணத்தில் சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் கிடைக்கும், 

சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் பைக் (Electric Bike) 236 கிமீ என்ற வரம்பை அளிக்கிறது. சிம்பிள் ஒந் பைக் அடையக்கூடிய அதிகபட்ச வேகம் மணிக்கு 105 கிமீ ஆகும். பைக்கில் 4.8kWh பேட்டரி (ஒருங்கிணைந்த நிலையான மற்றும் கையடக்க) மற்றும் 7kW மோட்டார் உள்ளது. 

சிம்பிள் ஒன் பைக்கில் ஒரு ஸ்மார்ட் டாஷ்போர்டு, உங்கள் பைக்கோடு உங்களை இணைக்கும் ஒரு செயலி, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், உங்கள் அழைப்புகள் மற்றும் இசை தேவைகளுக்கான ப்ளூடூத் இணைப்பு மற்றும் இவற்றைப் போன்ற இன்னும் பல அம்சங்கள் வழங்கப்படுள்ளன.

ALSO READ: Electric Vehicles: மின்சார வாகனம் வாங்கினால் பம்பர் மானியம், அரசாங்கம் கூறியது என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News