6 ஆண்டுகள் நிறைவு: ஜியோ அதிரடி வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 லட்சம் வரை பரிசு!

Reliance Jio Offer: ஆறு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து,  தனது வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோவின் மிப்பெரிய சலுகையை அறிவித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 7, 2022, 03:04 PM IST
  • ரிலையன்ஸ் ஜியோவின் மிப்பெரிய சலுகை
  • செப்டம்பர் 6-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11 வரை
  • இந்தச் சலுகை தமிழ்நாடு வட்டத்தில் பொருந்தாது
6 ஆண்டுகள் நிறைவு: ஜியோ அதிரடி வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 லட்சம் வரை பரிசு! title=

இந்தியாவின் நம்பர் 1 தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சலுகைகளை வழங்கியுள்ளது. ஜியோ நிறுவனம் 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம், ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.10 லட்சம் வரை வெகுமதியை வெல்ல முடியும். இதற்காக வாடிக்கையாளர்கள் தங்கள் ரிலையன்ஸ் ஜியோ தொலைபேசி எண்ணை ரீசார்ஜ் செய்தால் மட்டும் போதும். வாருங்கள், அதன் முழு விவரத்தையும் அறிந்துக்கொள்ளுவோம்.

ஆஃபர் செப்டம்பர் 6 முதல் 11 வரை இருக்கும்:

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த சலுகை செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 11 ஆம் தேதி வரை இருக்கும். இந்தச் சலுகையைப் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ஜியோ ப்ரீபெய்ட் எண்ணை ரூ. 299 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த ரீசார்ஜ் சலுகை காலத்தில் (செப்டம்பர் 6-11) மட்டுமே செய்யப்பட வேண்டும். ஆனால், இந்தச் சலுகை தமிழ்நாடு வட்டத்தில் பொருந்தாது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இந்த சலுகை எங்கெல்லாம் செல்லுபடியாகாது என்பதை நிறுவனம் தெரிவிக்கவில்லை. அதாவது, இந்தச் சலுகை தமிழ்நாடு தவிர நாட்டின் மற்ற பகுதிகளில் செல்லுபடியாகும் என்று கருதலாம்.

6 ஆண்டுகள் நிறைவு: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி சேவை

இது குறித்து தகவலை ரிலையன்ஸ் ஜியோ ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மற்ற விவரங்கள் தற்போது நிறுவனத்தால் பகிரப்படவில்லை. ஜியோ நிறுவனம் 4ஜி சேவையை இந்தியாவில் 5 செப்டம்பர் 2016 அன்று அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: உங்கள் ஸ்மார்ட்போனில் 5ஜி வேலை செய்யுமா? இப்படி தெரிந்துகொள்ளலாம்

தற்போது 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சலுகையும் அறிவித்துள்ளது. இந்த சலுகை காலத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் நிறுவனத்திடமிருந்து சில பரிசுகளைப் பெறலாம். உங்களிடம் ரிலையன்ஸ் ஜியோ தொலைபேசி எண் இருந்தால், நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த சலுகை தற்போது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை செல்லுபடியாகுமா இல்லையா என்பது குறித்த தகவல் நிறுவனத்தால் வழங்கப்படவில்லை.

மேலும் படிக்க: பிஎஸ்என்எல்-ன் புதிய பிளான்! ஜியோவை விட பாதிக்கும் குறைவான விலையில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News